கவிக்கூத்தனின் கவிதை நூல் வெளியீடு

By Digital Desk 5

05 Aug, 2022 | 11:35 AM
image

பிரித்தானியாவில் வாழும் கவிக்கூத்தன் க.பிரேம்சங்கர் எழுதிய மெய்யெனப் பெய்யும் பொய் என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் (04) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

அமெரிக்க பொறியியலாளர் வேலாயுதபிள்ளை கணேஸ்வரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் சிறப்பு விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் கு. சுரேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். டான் குழுமப் பணிப்பாளர் எஸ்.எஸ். குகநாதன் வாழ்த்துரை வழங்கினார்.

நூலின் வெளியீட்டுரையை வலிகாமம் கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் கவிஞர் ம.பா. மகாலிங்கசிவமும் நயப்புரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் ஆற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right