வருடத்தின் சிறந்த புலனாய்வு அதிகாரி விருது வென்றவர் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார்

By Vishnu

05 Aug, 2022 | 11:43 AM
image

வரு­டத்தின் சிறந்த புல­னாய்வு அதி­காரி என விருது வென்ற அமெ­ரிக்க பொலிஸ் அதி­காரி ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்டில் சிக்­கி­யுள்ளார்.

43 வய­தான கிற­கரி டேனியல் பியூ­மர்­சாசிஸ் எனும் இவர், கலி­போர்­னியா மாநி­லத்தின், சான்த அனா நகர பொலிஸ் அதி­கா­ரி­யாக 11 வரு­டங்கள் கட­மை­யாற்­றி­யவர். பாரிய குற்­றச்­செ­யல்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் பொலிஸ் குழுவில் இடம்­பெற்­றி­ருந்­தவர் இவர்.

2019 ஆம் ஆண்டு வரு­டத்தின் சிறந்த புல­னாய்வு அதி­கா­ரி­யாக அவர தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார்.

எனினும் தற்­போது சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்­டு­களை அவர் எதிர்­கொண்­டுள்ளார்.

14 வயது சிறுமி என தான் கரு­திய ஒரு­வ­ருக்கு அவர் ஆபா­ச­மான தக­வல்­களை பரி­மா­றி­யி­ருந்தார். 2021 டிசெம்பர் மற்றும் 2012 ஜன­வரி காலப்­ப­கு­தியில் இத்­த­க­வல்­களை பரி­மா­றி­யி­ருந்தார். 

ஆனால், சிறு­மி­யாக நடித்த மாறு­வே­டத்­தி­லி­ருந்த உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரு­ட­னேயே அவர் மேற்­படி தக­வல்­களை பரி­மா­றி­யி­ருந்தார் என்­பதை அவர் அறிந்­தி­ருக்­க­வில்லை.

இதனால், அதி­கா­ரி­க­ளிடம் கிற­கரி டேனியல் சிக்­கிக்­கொண்டார். 

அவரை கைது செய்­வ­தற்கு பிடி­வி­றாந்து பிறக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அவர் அதி­கா­ரி­க­ளிடம் சர­ண­டைந்தார். 

பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள கிற­கரி டேனியல், ஒக்டோர் மாதம் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது அவர்  கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

கலி­போர்­னியா மாநி­லத்தின் ஓரிகன் கவுன்ரி வழக்­குத்­தொ­டுநர் டொட் ஸ்பிட்ஸர் விடுத்த் அறிக்­கை­யொன்றில், “சமூ­கத்தை தீங்­கு­க­ளி­லி­ருந்து பாது­காக்கும் புனி­த­மான பொறுப்­பு­களை பொலிஸ் அதி­கா­ரிகள் கொண்­டுள்­ளனர்” எனத் தெரி­வித்­துள்ளார்.

“சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்த பொலிஸ் அதி­காரி ஒருவர், சிறுமி என நம்­பப்­ப­டு­ப­வ­ருடன் தகாத வகை­யி­லான உரை­யா­டல்­களில் ஈடு­ப­டு­வது அதிர்ச்­சி­க­ர­மா­னது.

தம்மை பாது­காக்க வந்­த­வர்கள் என பிள்­ளை­க­ளுக்கு எம்மால் சொல்­லப்­பட்­டா­வர்­க­ளா­லேயே இலக்­கு­வைக்­கப்­ப­டு­வது குறித்து கவ­லை­ய­டை­யயும் நிலை பிள்­ளை­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டாது” எனவும் டொட் ஸ்பிட்ஸர்  தெரி­வித்­துள்ளார்.

பொலிஸ் அதி­காரி கிற­கரி டேனியல் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டால் அவ­ருக்கு ஒரு வருட சிறைத்­தண்­டனை விதிக்கப்படுவ துடன், பாலியல் குற்றவாளியாக அவரின் பெயர் பதிவுசெய்யப்பட வாய்ப்புள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right