13 வயது மாணவனுடன் பாலியல் உறவுகொண்ட ஆசிரியையின் சிறைவாசம் பிரசவத்தினால் ஒத்திவைப்பு 

Published By: Vishnu

05 Aug, 2022 | 11:42 AM
image

13 வய­தான மாண­வ­னுடன் வகுப்­ப­றையில் பாலியல் உறவு கொண்ட  அமெ­ரிக்கப் பாட­சாலை ஆசி­ரியை ஒருவர் சிறைத்­தண்­டனை அனு­ப­விப்­பது ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி ஆசி­ரி­யைக்கு அண்­மையில் குழந்தை பிறந்­த­மையே இதற்­கான காரணம்.

32 வய­தான மார்கா பொட்லைன் எனும் யுவதி, டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள பாட­சா­லையில் ஆசி­ரி­யை­யாக பணி­ய­றா­றிய வந்­தவர். 

இவர் மேற்­படி பாட­சா­லையின் மாண­வ­னுடன் வைத்து பாலியல் உறவு கொண்டார் என குற்றம் சுமத்­தப்­பட்­டது.

அம்­மா­ணவன் 13 வயது சிறு­வ­னாக இருந்­த­போது ஆசி­ரியை  இத் ­துஷ்­பி­ர­யோகம் ஆரம்­பித்­த­தா­கவும், 3 வரு­ட­காலம் இது தொடர்ந்­த­தா­கவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது. பாட­சாலை வகுப்­ப­றை­யிலும் ஆசி­ரியை தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக அதி­கா­ரி­க­ளிடம் மேற்­ப­டி­மா­ணவன் தெரி­வித்­தி­ருந்தான். மேற்­படி மாண­வ­னுக்கு தற்­போது 16 வய­தா­கு­கி­றது.

மேற்­படி ஆசி­ரியை விவா­க­ரத்து செய்த பின்னர், அம்­மா­ணவன் வசித்த குடி­யி­ருப்புத் தொகு­தியில் மார்கா பொட்லைன் குடி­யே­றி­யி­ருந்தார்.

முன்னாள் மாணவன் ஒருவன் தன்னை தொந்­த­ர­வு­ப­டுத்­து­வ­தாக பாட­சாலை அதி­ப­ரிடம் ஆசி­ரியை மார்கா பொட்லைன் முறைப்­பாடு செய்­தி­ருந்தார். இது தொடர்­பான விசா­ர­ணையின் பின்னர் மேற்­படி விடயம் அம்­ப­ல­மா­கி­யி­ருந்­தது. 

மார்கா பொட்லைன் மற்றும் மாண­வனின் தொலை­பே­சி­களை அதி­கா­ரிகள் ஆராய்ந்­த­போது, ஆபா­ச­மான தக­வல்கள், படங்கள் பரி­மா­றப்­பட்­டி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

தகாத வகை­யி­லான படங்கள், வீடி­யோக்­களை தான் மேற்­படி மாண­வ­னுக்கு அனுப்­பி­ய­தா­கவும், அம்­மா­ண­வ­னுடன் பாலியல் உறவு கொண்­ட­தா­கவும் மார்கா பொட்லைன் ஒப்­புக்­கொண்டார். 

அவ­ருக்கு அதி­க­பட்­ச­மாக ஆயுட்­காலத் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட வாய்ப்­பி­ருந்­தது. குறைந்­த­ப­ட்சம் 20 வருட சிறைத்­தண்­டனை விதிக்­க­கப்­பட வேண்டும் என வழக்­குத்­தொ­டு­நர்கள் கோரினர்.

எனினும் அவர் 60 நாட்கள் மாத்­திரம் சிறைத்­தண்­டனை அனு­ப­விக்க வேண்டும் என தீர்ப்­ப­ளித்­தது.

இந்­நி­லையில், அண்மையில் அவர் குழந்தை யொன்றை பிரசவித்ததால் 2023 ஜூன் 5 ஆம் திகதிவரை சிறைக்குச் செல்லத் தேவையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்படி குழந்தைக்கு குறித்த மாணவன் தந்தை அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right