ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு நவசமசமாஜக்கட்சி கண்டனம்

By Vishnu

04 Aug, 2022 | 08:51 PM
image

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு நவசமசமாஜக்கட்சி தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ன கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்த நாட்டின் தொழிலாளர்களின் அதிக மதிப்பையும் நம்பிக்கையையும் அதிகம் பெற்ற ஒரு தலைவரை எழுந்தமானமாக கைது செய்தமையை  இந்த நாட்டின் இடதுசாரி சக்திகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இனவாதத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக தொடர்ந்து போராடி வந்த ஒருவராகவும், ராஜபக்ச குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர உறுதியுடன் போராடிய தொழிலாளர் வர்க்க தலைவரை கைது செய்தமையை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக விடுதலை செய்யுமாறு வேண்டிகொள்கிறோம் என அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right