மோசமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் தோட்டத்தொழிலாளர்கள்

Published By: Vishnu

04 Aug, 2022 | 07:59 PM
image

குமார் சுகுணா

இலங்கையின் பொருளாதார முதுகெலும்பு என கூறப்படுகின்ற மலையக தோட்டத் தொழிலாளர்கள் நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததை விட மிகவும் மோசமான ஒரு வாழ்க்கையை இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை நாவலப்பிட்டி கெட்டபுலா சம்பவம் எடுத்துரைத்திருக்கின்றது.

மழை காலங்களில் பாரிய அனர்த்தங்கள் உருவாகுகின்றமையை நாம் காலங்காலமாக பார்த்து அனுபவித்துவருகின்றோம். மண்சரிவு,  வெள்ள அபாயம், மரங்கள் முறிந்து விழுவது இதனால் ஏற்படுகின்ற உயிர் சேதங்கள் என மழையோடு தொடர்பு பட்ட அனர்த்தங்கள் பல இருக்கின்றன.

ஆனால் சில அனர்த்தங்கள் நம்மால் தவிர்க்க  கூடியவை. தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் உயிரை பிழிவதாக உள்ளது. கொழுந்தோடு ஆற்றை கடக்க முயன்ற தொழிலாளர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவமே அது.

இந்த நாட்டுக்கு பொருளாதாரத்தினை ஈட்டித்தருகின்ற முக்கிய துறைகளில் ஒன்றாக தேயிலை விளங்குகின்றது. கொரோனா கால கட்டமாக இருந்தாலும் பொருளாதார நெருக்கடி காலகட்டமாக இருந்தாலும் தேயிலை நெருக்கடி இன்றி இடையூறு எதுவும் இன்றி ஏற்றுமதி செய்யப்பட்டுதான் கொண்டிருக்கின்றது.

கொரோனாவில் எல்லா தொழிலில் ஈடுபடும் மக்களும் வீடுகளிலேயே முடங்கி கிடக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விடுப்புகள் இன்றி  பணிக்கு சென்று நாட்டின் அன்னிய செலவானியை ஈட்டிக்கொடுத்தனர்.

வெள்ளைகாரர்களினால் இந்த நாட்டுக்கு அவர்களின் பொருளாதார மேம்பாட்டை குறிக்கோளாக கொண்டுதான் இந்த மக்கள் அழைத்து வரப்பட்டனர்.  ஆனால்  வெள்ளைகாரர்களின் காலத்தில் அனுபவித்த பாதுகாப்பு முறைமைகள்,  சுகாதார கட்டமைப்புகள் என்பன இன்று இல்லை என்றே கூற வேண்டும். இலங்கை சுதந்திரம் பெற்றபோது மிக பெரிய பொருளாதார வருவாயை பெற்றுக்கொடுத்த துறையாக தேயிலைதான் இருந்தது. 

சுதந்திரத்துக்கு  பின்னரும் இன்றுவரை  இந்த நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கி்ன்றனர். ஆனாலும், இன்னும் இந்த நாட்டில் ஏனைய பிரஜைகளுக்கு உள்ள தொழில் பாதுகாப்பு சட்ட திட்டங்கள் இவர்களுக்கு இல்லாதே உள்ளது. 

அபாயகரமான முறையில் தொழிலில் ஈடுபடுவதும் உயிர்களை இழப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.  இன்னும் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் எந்த வித  தொழில் பாதுகாப்பும் இல்லாது அபாயகரமான முறையிலேயே தங்களது தொழிலை செய்து வருகின்றனர், என்பதற்கு இந்த நாவலப்பிட்டி சம்பவம் மிக பெரிய உதாரணமாக அமைந்திருக்கின்றது.

நாவலப்பிட்டி கெட்டபுலா - அக்கரகந்த தோட்டத்தில் மூன்று தொழிலாளர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர்  நீரில் அள்ளுண்டு அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

மஹாவலி ஆற்றுக்கு நீரை ஏந்திச் செல்லும் கிளை ஆறான கெட்டபுலா அக்கரகந்த ஆற்றில், மழை அதிகரிக்கும் போது அங்கிருக்கும் பாலத்துக்கு மேலாக நீர் செல்வது வழமையான விடயம் என்பதுடன், இதன்போது கயிற்றின் உதவியுடனேயே மக்கள் பாலத்தை கடப்பதாகவும்  பிரதேசவாசிகள் தெரிவித்துள்ள நிலையில்,கடந்த முதலாம் திகதியும் அவ்வாறே நீர் அதிகரித்துள்ளது.

இதன்போது தோட்டத் தொழிலுக்குச் சென்றிருந்த 3 பிள்ளைகளின் தாயான 45 வயதான ஜெயலெட்சுமி கயிற்றின் உதவியுடன் பாலத்தை கடக்க முற்பட்ட போது கை நழுவி ஆற்றில் விழுந்துள்ளார்.

இதனையடுத்து அத்தோட்டத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 52 வயதான சத்தியசீலன் மற்றும் 3 பிள்ளைகளின் தந்தையான 36 வயதான சந்திரமோகன் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயற்சித்த போது, அவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இராணுவத்தினர் நாவலப்பிட்டி பொலிஸார், மற்றும் பொது மக்களும் இணைந்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த சம்பவத்தை நோக்கும் போதே அந்த மக்கள் எத்தனை அபாயகரமான முறையில் தங்களது தொழில் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர் என்பது தெட்ட தெளிவாக புரிகின்றது.  பாலம் என்பதே ஆற்றை கடப்பதற்காக கட்டப்படுவது ஆனால் அது மழை நீரில் மிதக்கும் அளவு கட்டப்பட்டிருக்கின்றது என்பது எத்தனை வேடிக்கை. அதில் எத்தனை ஊழல் இருக்க வேண்டும்.

காலநிலை மிகவும் மோசமாக இருக்கும் போது  மழை வெள்ளம் மின்னல் வெட்டு இடி விழதல் மரம் முறிவு மண்சரிவு என பல அபாயங்களை இந்த மக்கள் எதிர் கொள்ள நேரிடுகின்றது. மழை அதிகமாக இருக்கும் பட்சத்தில் சில தோட்டங்களில் அரை நேரத்தோடு விீட்டுக்கு வந்துவிடுவர். 

அதாவது இரண்டு மணி வரை நின்று வேலை செய்து முடித்துவிட்டு வந்துவிடுவர். ஆனால்ங சில நிர்வாகங்கள்  கன மழையிலும் 5மணி வரை தொாிலாளர்களின் உழைப்பை அட்டை பூச்சாக குகெ்கின்றதனை பார்க்கின்றோம். அபாயகரமான பிரதேசங்களை தவிர்த்து வேற இடங்களில் இது போன்ற நேரங்களில் பணிக்கு அமர்த்தலாம். ஆனால் அவ்வாறு செய்வதில்லை.

வெள்ளம் காட்டாறாக பாயும் போது கயிற்றை கட்டிக்கொண்டு ஆற்றை கடப்பது என்பது எத்தனை மோசமான அபாயகரமான துயர்மிகு செயல் என யோசிக் வேண்டும். இது எத்தனையாவது நூற்றாண்டு.. இந்த சம்பவம் நேற்று நடந்தது அல்ல.

இது பல நாட்களாக நடந்துள்ளது. நேற்று ஓர் அசம்பாவிதம் ஏற்படவும் விசயம் வெளியே வந்திருக்கின்றது. இல்லை இது போன்ற விபத்து நேரிட்டு இருக்காவிட்டால் இன்றும் ஆற்றை தொழீலாளர்கள் கயிற்றில்  கடந்து கொண்டுதான் இருப்பர். இந்த அபாயம் யாருக்கும் தெரிந்திருக்காது. 

இந்த  காலத்தில் ஒரு தோட்டத்தில் இப்படி ஒரு விடயம் நடந்துள்ளது. ஐயோ என்று இனி அனுதாபங்கள் அரசியல் வாதியின் இரங்கள் செய்திகள் நிச்சயம் ஊடகங்களை அலங்கரிக்கும். ஆனால் இதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க ஒருவரும் முன்வர மாட்டார்.

ஆபத்தான முறையில் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்றால் அதனை கவனிக்க வேண்டியது. மாற்ற வேண்டியது அவர்களது வாக்குகளில்  சொகுசு வாழ்க்கை நடத்தும் அரசியல் வதிகளின் கடமைதான். தோட்ட நிர்வாகம் இலாப நோக்கை மட்டுமே கொண்டது. 

அது பாலத்தை புனரமைப்பதையோ தொழில் சட்டங்களை பேணுவதோ கிடையாது. ஆயிரம் ரூபாவிற்கே இன்னும் வழி கிடைக்காத நிலையில் தொழிலாளர்களின் நலனை அவர்களிடம் நாடுவது என்பது பொய்கால் குதிரையை நம்புவது போன்றதே.

எத்தனையோ தொழிலாளிகள்  குளவி கொட்டியும் பாம்பு கடித்தும் உயிர் இழக்கி்னறனர். பலர் தேயிலை காடுகளில் இடி விழந்தும் மண்ணுக்குள் புதைந்தும் மாண்டு போகின்றனர். இது போன்ற விபத்துகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 

இவற்றை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் தோட்ட நிர்வாகங்கள் எடுத்ததில்லை. இந்திய பிரதமர் இலங்கை வரும் போது குளவி கூடுகள் கழைக்கப்பட்டன. ஆனால் தொழிலாளர்கள் அதனால் உயிர் இழப்புகளை வருடா வருடம் சந்திக்கின்றனர். இதனை தடுப்பதற்கான நடவடிக்கையை நிர்வாகமோ அரசியல் வாதிகளோ செய்ததுண்டா..

ஒரு சிறிய ஒரு உதாரணம் போதும். சில காலங்களுக்கு முன்  பலாங்கொடை  பிரதேசத்தில் மண்ணோடு மரம் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். அது அபாயரமான பிரதேசம் எனவே அவ்விடத்தில்  கொழுந்து பறிப்பது கடினம் என குறித்த தோட்டத்தின் பணி அதிகாரியிடம் தொழிலாளிகள் முன்னதாக தெரிவித்த போதிலும் அவர் அதனை அசட்டை செய்து அவ்விடத்திலேயே பெண் தொழிலாளர்களை வேலைக்கு பலவந்தமாக அமர்த்தியிருக்கின்றார். 

இறுதியாக மரம் விழுந்து இரண்டு பெண் தொழிலாளர்களின் உயிர் போனதுதான் மிச்சம். இதுதான் தோட்ட நிர்வாகம். இவர்களிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது. சிலர் கூறகூடும் கொழுந்து போட்டி வைத்து பரிசுதருவதாக. ஆனால் அதெல்லாம் மிக பெரிய இராஜதந்திரம் என்பது தொழிலாளர்களின் கருத்து. ஒரு பெண் இருபது நிமிடத்தில் இருபது கிலோ கொழுந்து பறித்து விடுகின்றாள்.

என்றால் அவளுக்கு கிடைப்பது ரொக்க பரிசு. ஆனால் அதன் விளைவு ஏனைய பெண்களால் ஏன் பறிக்க முடியாது. இவள் பறிக்கும் போது ஏனையவர்களும் பறிக்க வேண்டுமே என்ற கேள்வியை  நிர்வாகம்  கேட்பதாக சில பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கருத்து வெளியிடுகின்றனர். இவ்வாறு தொழிலாளர்களின் நலனில் நிர்வாகம் அக்கறை செலுத்தும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.  ஆனால் மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும்.

காலநிலை சீராக இல்லாத நாட்களில் அதிகமாக மழை பெய்கின்றது. இதனால் ஆற்றை கடப்பது கடினம் என்று தெரிந்திருக்கும். தோட்ட நிர்வாகம் இது போன்ற நேரத்தில்  அபாயகரமான பகுதிகளில் தொழிலாளிகளை வேலைக்கு அமர்தாமல் இருக்க வேண்டும். கயிற்றை கொண்டு ஆற்றை கடப்பது என்பது அதுவும் கொழுந்து மூட்டையோடு எத்தனை கொடுமை. அடிமைகளை கூட இப்படி இந்த காலத்தில் நடத்துவரா என்பது தெரியாது.

இலங்கையில் 2009 இலக்கம் 38இல் அமைந்த தேசிய தொழில் சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான நிறுவகசட்டத்தின் கீழ் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் இணைப்பு நிறுவகமாக தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான நிறுவகம் உருவாக்கப்பட்டது. 

இந்த நாட்டுக்குள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றினூடாக தொழில் ரீதியாக ஏற்படும்விபத்துக்கள் மற்றும் தொழில் சார் நோய்களை கட்டுப்படுத்தல் மற்றும் சரியான பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தலின் ஊடாக சௌபாக்கியமானதொரு தொழில் சூழலை அனைத்துப் பிரஜைகளுக்கும் பெற்றுக்கொடுக்கவே எமது தேசிய தொழில் சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான நிறுவகம் பாடுபடுகின்றது என கூறப்படுகின்றது. ஆனால் இந்த பாதுகாப்புகள் என்பது தோட்டத்தொழிலாளிகளை உள்வாங்காமல் இருப்பது ஏன்.

கணினியில் கை அழுக்காகமல் பணிப்பார்பவர்களுக்கே அத்தனை தொழில் பாதுகாப்பு சட்டங்கள் இருக்கும் போது மண் தொட்டு வேலை செய்யும் மக்களின் உயிரை பாதுகாப்பதற்கான சட்டங்கள் இறுக்கமாக இருக்க தானே வேண்டும். சரி இது பெருந்தோட்ட நிர்வாகத்துடன் தொடர்புடையது என அரசும் இதனை கண்டுகொள்வதில்லை். இந்த மக்களை இன்னும் இன்னொரு நாட்டின் பிரஜைகளாகவே பார்க்கின்றனர். இதனால் தொழிலாளிகளுக்கு தொழில் பாதுகாப்பு என்பதனை நாம் யாரிடம் எதிர்பார்க்க முடியும். இது எப்போது கிடைக்கும் என்றும் கூற முடியாது.

ஆனால் இந்த மக்களின் வாக்குகள் மூலம் சொகுசாகவும் தானும் தனக்கு பின் தனது மனைவி , பிள்ளை என அனைவருக்கும் அரச சலுகைகளை  பெற்றுக்கொடுத்து அனுபவித்து சொகுசாக வாழ்ந்துக்கொண்டு அறிக்கை விடும் அரசியல் வாதிகள்  யதார்த்தமாக இந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்காகவும் கொஞ்சம் வாழுங்கள். 

குறைந்தது. இது போன்ற அபாயகரமான இடங்களில் தொழில் செய்வதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில்  விழிப்புணர்வு கூட்டங்களை செய்யுங்கள். தேர்தல் நேரங்களில் மட்டும் கூட்டம் போட்டு உங்களது புகழை பாடும் நீங்கள் மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு கூட்டங்களை ஏற்படுத்தலாம். 

பாதைகளை பாலங்களை உருவாக்கும் போது நேர்மைாயாக செய்யுங்கள் ஏதோ பாதை அமைக்க வேண்டும் பாலம் அமைக்க வேண்டும் என பேச்சுக்கு செய்யாதீர்கள். மக்கள் பாதை வந்துவிட்டது என மகிழ்வர் . அது தரமானாதா என்று உங்களிடம் கேள்வி கேட்பதில்லை. அந்தளவு உங்களை நம்புகின்றனர். எனவே அவர்களுக்காக செய்யும் சேவைகளை நேர்மையாக செய்யுங்கள். உண்மையில் இந்த அக்கரகந்த ஆற்றின் மீதான பாலம் உறுதியானதாகவும் உயரமாகவும் இருந்தால் நீரில் மூழ்கி இருக்காது. அது மட்டும் அல்ல  அந்த மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு இருந்திருக்கும் எனில் கயி்ற்றை பிடித்து கொண்டு ஆற்றை கடக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. 

தொழில் முக்கியம்தான் அனை விட பாதுகாப்பு முக்கியம் உயிர் முக்கியம். இதனால் அபாயகரமான நேரத்தில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பாதுகாப்பை கடைப்பிடியுங்கள். நம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள் வேண்டும்..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13