(எம்.மனோசித்ரா)
மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கைவிட்டு, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அதனை விடுத்து துப்பாக்கிகளாலும், குண்டுகளாலும் மக்களின் போராட்டங்களை முடக்க முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 'சர்வகட்சி ஒன்றிணைவு' என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளின் தலைவர் இணைந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கைவிட்டு , அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
மக்களுக்கு அவர்களது ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய உரிமை காணப்படுகிறது. வன்முறையற்ற ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்களுக்கு காணப்படும் உரிமையை எவராலும் மீற முடியாது.
ஆனால் இந்த அரசாங்கம் அரச மிலேச்சத்தனத்தையும் , அரச பயங்கரவாதத்தையும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்றன எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு என்ற ரீதியில் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள சிவில் பிரஜைகளுக்கும் , தொழிற்சங்க தலைவர்களுக்கும் நிபந்தனைகள் இன்றி நாம் ஆதரவை வழங்குவோம்.
சந்தர்ப்பவாதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும். மக்கள் ஆணைக்கு இந்தளவிற்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
மக்களிடம் நேரியாகச் சென்று அவர்களின் சுக துக்கங்கள் தொடர்பில் ஆராயுமாறு வலியுறுத்துகின்றோம். அதனை விடுத்து துப்பாக்கிகளாலும் , குண்டுகளாலும் மக்களை முடக்க முயற்சிக்க வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM