தாய்வானின் கடற்பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை செலுத்தியது சீனா

By Rajeeban

04 Aug, 2022 | 04:31 PM
image

தாய்வானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்பகுதிகளை நோக்கி சீனா ஏவுகணைகளை செலுத்தியது.

தாய்வானின் கிழக்கு கடல்பகுதியை நோக்கி பல ஏவுகணைகளை செலுத்தியுள்ளதாக சீன இராணுவத்தின் கிழக்கு பகுதி கட்டளைபீடம் தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள் தங்கள் இலக்கை துல்லியமாக தாக்கினஎன சீனா  தெரிவித்துள்ளது.

போர் ஒத்திகை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது ஒத்திகை காரணமாக விதிக்கப்பட்ட வான்வெளி கடல் பகுதி கட்டு;ப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என சீனா தெரிவித்துள்ளது.

தாய்வான் நீரிணையில் உள்ள தீவுகளில் நீண்ட தூர ஏவுகணைகள் விழுந்து வெடித்தன என தாய்வான் தெரிவித்துள்ளது இந்த தீவுகள் தாய்வானின் முக்கிய பகுதிக்கு அருகில் காணப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right