( ஹபீஸ் )

மத்திய மாகாண சபையிலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு பல்லேகலை மாகாண சபை மண்டபத்தில் சபைத் தலைவர் எல்.டி.நிமலசிரி தலைமையில் இன்று கூடியது. முதல் நடவடிக்கையாகவே மத்திய மாகாண சபையிலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு சபைத் தலைவர் அறிவித்தார்.

ஊடகவியளார்களது கவனத்திற்கு இதனைத் தெரிவிக்க விரும்புகிறேன். சபையில் எதிரணித்தலைவி மற்றும் ஆளும் தரப்பு, மாகாண அமைச்சர்கள் உட்பட சகல தரப்பினதும் வேண்டுகோளின்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஊடகவியலாளர்களை ஒரு ஊடக சந்திப்பில் கலந்துரையாவுள்னோம். அதன் பின் ஊடகவியலானர்கள் சபைக்கு சமுகமளித்து செய்திகளை சேகரிக்க முடியும். அது வரை செய்தி சேகரிக்க வந்துள்ள ஊடக வியலாளர்களை அவர்களது ஊடக கூடத்தில் இருந்து வெளியேறுமாறு வேண்டுகிறேன் என்றார்.

இதனை அடுத்து அங்கு செய்தி சேகரிக்க வந்திருந்த சுமார் 20 அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக வியலாளர்கள் சபை ஊடக கூடத்திலிருந்து வெளியேறினர். அதேநேரம் கடந்த அமர்வின் போது ஒரு சில ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக சபையில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது ஊடகவியலாளர்களது நலனை அது பாதிப்பதாகக்கூறி ஊடகவியலாளர்கள் சபையை விட்டு வெளிநடப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண சபை அங்கத்தவர்கள் ரஷ்யாவிற்கு மேற்கொண்ட சுற்றுப் பயணம் தொடர்பாக செய்தி வெளியிட்டமை உட்பட இன்னும் சில செய்திகள் தொடர்பாக சபை அங்கத்தவர்கள் மற்றும் மாகாண அமைச்சர் எதிரிவீர வீரவர்தன உட்பட பலர் அதிருப்தி வெளியிட்டு உரையாற்றிமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே அங்கு முறுகல் நிலை உருவானது என்பதும் குறிப்பிடத்ததக்கது.

அதேநேரம் மாகாண சபைக்கு செய்தி நேகரிக்கச் செல்லும் சகல ஊடக வியலாளர்களுக்கும் சபை அமர்வுகள் தொடர்பாக செய்திகளை சேகரிக்க வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.