கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவு- மன்னிப்புச்சபை கவலை

Published By: Rajeeban

04 Aug, 2022 | 12:21 PM
image

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐந்தாம் திகதி மாலை ஐந்துமணிக்கு முன்னர் அந்த பகுதியிலிருந்து  வெளியேறவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை  கரிசனை வெளியிட்டுள்ளது.

பொதுஇடங்களில் அமைதியாக ஒன்றுகூடலிற்கான  மக்களின் உரிமைகளை அதிகாரிகள் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை அகற்றுவதற்கு பலத்தை அச்சுறுத்தலை அதிகாரிகள் பயன்படுத்தக்கூடாது எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்களை தொடர்ச்சியாக கைதுசெய்வதன் மூலம் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களிற்கு எதிரான ஒடுக்குமுறைகளை மோசமாகவும் வேகமாகவும் முன்னெடுத்துள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை அமைதியாக ஒன்றுகூடுவதற்கு தங்களிற்கு உள்ள உரிமையை பயன்படுத்தியமைக்காக மாத்திரம் கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகாரிகள் விடுதலை செய்து அவர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

குற்றவியல் தவறுகள் இழைக்கப்பட்டன என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்தால் சர்வதேச உரிய நடைமுறை மற்றும் நியாயமான விசாரணை தராதரங்களிற்கு ஏற்ப  ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தனித்தனியாக விசாரணை செய்து குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

கருத்துச்சுதந்திரம் மற்றும் அமைதியான  ஒன்றுகூடலிற்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் மதிக்கவேண்டும் பாதுகாக்கவேண்டும் ஊக்குவிக்கவேண்டும் மக்கள் தங்கள் சுதந்திரத்தை அமைதியாக அனுபவிப்பதற்கு அனுமதியளிக்கவேண்டும்,எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47