விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

By Vishnu

04 Aug, 2022 | 12:44 PM
image

முன்னணி நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வதற்காக கடுமையாக உழைத்து வரும் நடிகர் விக்ராந்த் நடிப்பில் தயாராகி வரும் புதிய பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

'தொட்டுவிடும் தூரம்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வி. பி. நாகேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஷிரீன் காஞ்சிவாலா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர் தமிழ், வேல. ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பல நடிக்கிறார்கள். மாசாணி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை ஏ. எஸ். என்டர்டெய்ன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் அலெக்சாண்டர் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தமிழகத்தின் தென் மாவட்ட பின்னணியில் சமூக அக்கறையுடன் குடும்பப் பாங்கான எக்சன் என்டர்டெய்ன்மென்ட் ஜேனரில் இந்த திரைப்படம் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து தேனியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்.'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right