ரசிகர்களைக் கவருமா பரத்தின் 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்'..?

By Vishnu

04 Aug, 2022 | 12:54 PM
image

நடிகர் பரத் நடிப்பில் தயாராகியிருக்கும் 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்' எனும் திரைப்படம், ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று வெளியாகிறது.

மலையாள நடிகரும், இயக்குநருமான சுனீஷ் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்'. இதில் 'சின்ன தளபதி' நடிகர் பரத் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை விவியா ஷன்த் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் அனுமோகன், அடில் இப்ராஹிம், நீனா குரூப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஷினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கைலாஷ் மேனன் இசையமைத்திருக்கிறார். க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லேஸீ கேட் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனூப் காலீத்  பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

பரத் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்' குறித்து ட்விட்டரில்,'' தமிழ் திரையுலகில் இதற்கு முன்னர் இந்த வகையினதான சீரியஸ் கிரைம் திரில்லர் ஜேனரில் படங்கள் வெளியாகவில்லை. நடிகர் பரத் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக அற்புதமாக நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறார்.

தன் தங்கையின் கற்பை சூறையாடி, கொலை செய்த குற்றவாளிகளை, தந்திரமாக வலையில் விழ வைத்து, பழிக்கு பழி தீர்ப்பது தான் கதை என்றாலும், அதனை பார்வையாளர்கள் எளிதில் யூகிக்காத வகையில் நேர்த்தியாக திரைக்கதை அமைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர்'' என படத்தை பாராட்டி பதிவிட்டிருக்கிறார்கள்.

படத்தைப் பற்றிய நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருவதால், பரத் நடித்திருக்கும் 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்'  என்னும் திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right