சிலியில் திடீரென ஏற்பட்ட 104 அடி விட்டமான குழி

By Vishnu

04 Aug, 2022 | 01:01 PM
image

சிலி நாட்டில் திடீ­ரென ஏற்­பட்ட பாரிய குழி குறித்து அந்­நாட்டின் அதி­கா­ரிகள் விசா­ரித்து வரு­கின்­றனர். ஒரு டென்னிஸ் மைதா­னத்­தை­விட பெரிய அளவில் இக்­குழி உள்­ளது.

தென் அமெ­ரிக்க நாடான சிலியின் தலை­நகர் சான்­டி­யா­கோ­வி­லி­ருந்து 800 கிலோமீற்றர் தூரத்­தி­லுள்ள அட்­டா­காமா பாலை­வ­னத்தில் செப்புச் சுரங்கம் ஒன்­றுக்கு அருகில் இந்த குழி ஏற்­பட்­டுள்­ளது. 

இதன் விட்டம் சுமார் 32 மீற்­றர்கள் (104 அடி) ஆகும். சுமார் 60 மீற்றர் ஆழ­மு­டை­ய­தாக இக்­குழி உள்­ளது என சிலியின் தேசிய பூகோ­ள­வியல் மற்றும் சுரங்க சேவைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

கன­டாவின் லுன்டின் மைனிங் நிறு­வ­னத்­தினால் நடத்­தப்­படும் அல்­க­பெ­ரோசா சுரங்­கத்­துக்கு அருக்கில் இக்­குழி ஏற்­பட்­டுள்­ளது.

இக்­குழி கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து அது உறு­தி­யாக உள்­ள­தா­கவும் ஆட்­க­ளுக்கோ, உப­க­ர­ணங்­க­ளுக்கோ, உட்­கட்­ட­மைப்­புக்கோ சேதம் எதுவும் ஏற்­ப­ட­வில்லை என லுன்டின் மைனிங் நிறு­வனம் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்­ளது. 

எனினும், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அப்­ப­கு­தியில் நிலத்­த­ரடி சுரங்கப் பணிகள் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக அந்­நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, இப்­பா­ரிய குழியைச் சுற்றி 100 மீற்றர் நீள­மான பாது­காப்பு வேலி­யொன்றை தியேரா அமா­ரில்லா நக­ர­சபை அமைத்­துள்­ளது. 

இக்­குழி ஏற்­பட்­ட­மைக்­கான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்கும், அப்­ப­கு­தி­யி­லுள்ள மக்கள் மற்றும் ஊழி­யர்­களின் பாது­காப்பை உறு­திப்­படுத்துவ­தற்கும் நிபு­ணர்கள் நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­கின்­றனர் என சிலியின் தேசிய பூகோ­ள­வியல் மற்றும் சுரங்க சேவைகள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் டேவிட் மொன்­டே­னெக்ரோ தெரி­வித்­துள்ளார்.

சுரங்க அகழ்வு நடவடிக்கைகளின் விளைவாக இக்குழி ஏற்பட்டதா அல்லது இதற்கு வேறு காரணம் உள்ளதாக என தெளிவுபடுத்துமாறு நாம் கோரியுள்ளோம் என அந்நகர மேயர் கிறிஸ்டைன் ஸுனிகா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right