(எஸ்.என்.நிபோஜன்)கிளிநொச்சி அரச அதிகாரிகளால்  உதிரவேங்கை ஆலய காணி தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு நிலஅளவையும் கைவிடப்பட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டு கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிரவேங்கை வைரவர் ஆலய காணியை  பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  தனியார் ஒருவருக்கு தொழிற்சாலை  அமைப்பதற்காக வழங்க்கப்பட்டதனையடுத்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.இதனை தொடர்ந்து  ஆலய நிர்வாகம்  நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில் காணி மீண்டும் ஆலயத்திற்கு கிடைத்தது.இந்த நிலையில் தற்போது குறித்த காணியில் அரை ஏக்கர் தனக்குச் சொந்தமானது என்று கூறிக்கொண்ட பெண்ணொருவரின் வாக்குக்கு அமைய  இன்று நில அளவை அதிகாரிகளால்  நில அளவை செய்யச்சென்ற போது மீண்டும் விளையாட்டுக் கழகம் மற்றும் பொது மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. குறித்த காணி உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்குச் செந்தமான காணி பல ஆண்டுகளாக ஆலயமும், ஞானவைரவர் விளையாட்டுக் கழகமும் பயன்டுத்தி வந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து தற்போது வந்து தங்களுடையது என்று உரிமை கோருவது நியாயமற்றது அதற்கு நாம் அனுமதியளிக்க முடியாது என்று  பொதுமக்கள் தெரிவித்த நிலையில் நில அளவையும் கைவிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த காணி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் ஏ 9 வீதியோடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.