வீடியோ கோலில் நிர்­வா­ண­மாக தோன்றி ஆண்­களை மிரட்டி பணம் கறக்கும் பெண் !

By Vishnu

04 Aug, 2022 | 01:05 PM
image

வீடியோ கோலில் நிர்­வா­ண­மாக தோன்றிய இளம்பெண், ஆண்­களை குறிப்­பாக வய­தா­ன­வர்­களை மிரட்டி பணம் பறித்­த­தாக கூறப்­படும் சம்­ப­வங்கள் தொடர்பில் மும்பை பொலிஸார் விசா­ரணை நடத்­தி­வ­ரு­கின்­றனர்.

86, 57 மற்றும் 67 வய­தான நபர்­க­ளிடம் இவ்­வாறு பணம் பறிக்­கப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. 

மும்பை அந்­தேரி பகு­தியில் வசிக்கும் 86 வய­தான ஒரு முதி­ய­வ­ருக்கு கடந்த ஜூலை 28 ஆம் திகதி அறி­மு­க­மில்­லாத இலக்­கத்­தி­லி­ருந்து ஒரு வீடியோ கோல் அழைப்பு வந்­துள்­ளது.

அந்த வீடியோ அழைப்­புக்கு முதி­யவர் பதி­ல­ளித்­த­போது, அழைப்பு எடுத்த பெண் நிர்­வா­ண­மாக இருந்­ததைக் கண்­டுள்ளார். இதன்­போ­து வீடி­யோவை பதிவு செய்த அப்பெண், பின்னர் முதி­ய­வரை சாதா­ரண தொலை­பேசி அழைப்பு மூலம் தொடர்­பு­கொண்டு அச்­சு­றுத்­தினார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

'நான் நிர்­வா­ண­மாக இருக்கும் போது நீங்கள் என்­னுடன் பேசி­யதை பதிவு செய்­துள்ளேன். எனக்கு நீங்கள் பணம் கொடுத்தால் விட்­டு­வி­டு­கிறேன். இல்­லா­விட்டால் இணை­ய­த­ளத்தில் அந்த வீடி­யோவை இணை­யத்தில் பதி­வேற்றம் செய்­து­வி­டுவேன்' என அப்பெண் மிரட்­டி­யுள்ளார்.

மேற்­படி வீடி­யோவை இணை­யத்தில் வெளி­யி­டாமல் இருப்­ப­தற்கு தனக்கு 3 லட்சம் தர வேண்டும் என அந்த முதி­ய­வ­ரிடம் அந்த பெண் கூறி­யுள்ளார். 

இம்­மி­ரட்­ட­லுக்குப் பயந்த முதி­யவர், அப்­பெண்­ணுக்கு பணம் வழங்க சம்­ம­தித்தார். 2.99 லட்சம் இந்­திய ரூபாவை அப்பெண் குறிப்­பிட்ட வங்கிக் கணக்­குக்கு முதி­யவர் அனுப்பி வைத்தார். 

எனினும் இது குறித்து மும்பை அம்­போலி பொலிஸ் நில­யத்­தி­யத்தில் முதி­யவர் முறைப்­பாடு செய்தார்.

இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசா­ரணை நடத்­தி­ய­போது, அதே பகு­தியில் வசிக்கும் மற்­றொரு நபரும் இது போன்று நிர்­வாணப் பெண் மூலம் மிரட்­டப்­பட்­டுள்­ளமை தெரிய வந்­தது. 

ஜூலை 9 ஆம் திக­திக்கும் 19 ஆம் திக­திக்கும் இடையில் 58 வய­தான நபர் ஒரு­வ­ருக்கு அறி­மு­க­மில்­லாத பெண்­ணொ­ருவர் வீடியோ அழைப்பு எடுத்­தள்ளார்.

இப்­பெண்ணின் அச்­சு­றுத்­த­லை­ய­டுத்து தான் 64,000 ரூபாவை அப்பெண் கூறிய வங்கிக் கணக்­குக்கு அனுப்­பி­ய­தாக அந்­நபர் தெரி­வித்தார். அந்­ந­பரின் முறைப்­பாட்­டையும் 86 வய­தான முதி­ய­வரின் முறைப்­பாட்­டுடன் இணைத்த அம்­போலி நகர பொலிஸார், இது குறித்து விசா­ரணை நடத்­தி­வ­ரு­கின்­றனர்.

''இரு நபர்­களும் பணம் அனுப்­பிய வங்கிக் கணக்­கு­களை நடத்தி வரும் நபர்­களை கண்­டு­பி­டிக்­கவும், இரு நபர்­க­ளாலும் குற்­றம்­சு­மத்­தப்­பட்ட பெண் ஒரு­வரா என்­பதை கண்­ட­றி­யவும் நட­வ­டிக்கை மேற்­கொள்­கிறோம்'' என பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

67 வயது நப­ரிடம் 6.7 லட்சம் ரூபா மோசடி

இதே­வேளை, 67 வய­தான நபர் ஒரு­வரும் இவ்­வா­றான நிர்­வாண வீடியோ கோல் மிரட்­ட­லுக்குப் பயந்து 6.7 லட்சம் இந்­திய ரூபாவை செலுத்­தி­யுள்­ள­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மும்பை காட்­கோபார் பகு­தியைச் சேர்ந்த இந்­ந­ப­ருக்கு கடந்த ஜூலை 11 ஆம் திகதி இரவு வட்ஸ் அப்பில் 'ஹாய்' என ஒரு மெசேஜ் வந்­துள்­ளது. அதற்கு அந்­நபர் பதி­ல­ளித்­துள்ளார்.

பின்னர் மேற்­படி பெண், 67 வய­தான நபரை காதல்­வ­ச­மான உரை­யா­ட­லுக்குள் இழுத்­துள்­ள­துடன், அந்­ந­பரை குளி­ய­ல­றைக்குச் செல்­லு­மாறு அப்பெண் கோரினார் என முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து பொலிஸ் அதி­காரி ஒருவர், இந்­திய ஊட­கங்­க­ளுக்கு தகவல் தெரி­விக்­கையில், 'சிறிது நேரத்தின் பின், அப்பெண் வீடியோ அழைப்பு ஒன்றை விடுத்தார். வீடியோ கோலில் நிர்­வா­ண­மாக காணப்­பட்ட பெண், அந்­ந­பரின் ஆடை­க­ளையும் களை­யு­மாறு கோரினார். அதன்­படி, அந்­நபர் தனது ஆடை­களை களைந்தார்' எனத் தெரி­வித்­துள்ளார்.

மறுநாள் 67 வய­தான நப­ருக்கு ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­தது. அதில் பேசி­யவர் தான் டெல்லி பொலிஸ் கணினி விசா­ரணைப் பிரிவு அதி­காரி விக்ரம் ரதோட் என தன்னை அறி­மு­கப்­ப­டுத்திக் கொண்டார்.

மேற்­படி பெண் நடத்­திய வீடியோ உரை­யாடல் அப்பெண் யூரி­யயூப் தளத்தில் பதி­வேற்றம் செய்­துள்­ள­தா­கவும், இதன் மூலம் அந்­ந­ப­ரிடம் பணம் கறப்­ப­தற்கு அப்பெண் முயற்­சிப்­ப­தா­கவும் விக்ரம் ரதோட் என அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்ட நபர் கூறினார்.

அவ்­வீ­டி­யோவை யூரி­யூப்­பி­லி­ருந்து அகற்றச் செய்­வ­தற்கு மற்­றொரு நபரை தொடர்­பு­கொள்­ளு­மாறு 67 வயது நபரை விக்ரம் ரதோட் என்­பவர் கூறினார்.

குறித்த நபரை தொடர்­பு­கெர்­ண­ட­போது, வீடி­யோவை அகற்­று­வ­தற்கு 57,000 ரூபா தேவை என அந்­நபர் கூறி­யுள்ளார். குறித்த பணத்தை செலுத்­திய பின்னர், யூரியூப் தளத்­தி­லி­ருந்து வீடியோ அகற்­றப்­பட்­டதை தெரி­விக்கும் ஸ்க்றீன்ஷொட் ஒன்று அனுப்பி வைக்­கப்­பட்­டது.

பின்னர் குறித்த பெண்ணை கைது செய்­வ­தற்கு 50,000 ரூபா வழங்­கு­மாறு விக்ரம் ரதோட் கோரி­யுள்ளார். அப்­ப­ணத்தை 67 வயது நபர் அனுப்பி வைத்தார்.

அதன்பின் அவரை மீண்டும் தொடர்­பு­கொண்ட விக்ரம் ரதோட், தான் மேற்­படி பெண்ணை கைது செய்யச் சென்­ற­தா­கவும், ஆனால், அப்பெண் தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ள­தா­கவும் கூறினார். அப்­பெண்ணின் தொலை­பே­சியில் மேற்­படி வீடியோ இருப்­பதால், முதி­யவர் பிரச்­சி­னையில் சிக்­கிக்­கொள்­ளலாம் என ரதோட் எச்­ச­ரித்தார். 

அப்­பெண்ணின் தொலை­பே­சி­யி­லி­ருந்து வீடி­யோவை அகற்­று­வ­தற்கு 5 லட்சம் ரூபா பணம் வழங்­கு­மாறு விக்ரம் ரதோட் கோரினார்.

குஜ­ராத்தைச் சேர்ந்த நபர் ஒரு­வரின் வீடியோ உரை­யா­டலும் அப்­பெண்ணின் தொலை­பே­சியில் இருப்­ப­தா­கவும் அவர்கள், அப்­பெண்ணின் தற்­கொலை வழக்கில் இந்த 67 வயது நபரை சிக்க வைத்­து­வி­டு­வார்கள் எனவும், இதனால், அவரை பாது­காப்­பது மேலும் கடி­ன­மா­கி­விடும் எனவும் ரதோட் எச்­ச­ரத்தார்.

விக்ரம் ரதோட் கோரிய பணத்தை இரு தவ­ணை­களில் 67 வயது நபர் செலுத்­தினார். அதன்பின், குறித்த பெண்ணின் குடும்­பத்­தி­ன­ருக்கு இழப்­பீடு வழங்­கு­வ­தற்­காக மேலும் பணம் தரு­மாறு ரதோட் கோரினார் என பொலிஸ் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்பின் தான் ஏமாற்­றப்­ப­டு­வ­தாக உணர்ந்த நபர், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார். அவ்வேளையில் அவர் ஏற்கெனவே 6.7 லட்சம் இந்திய ரூபாவை மோசடிக்காரர்களுக்கு செலுத்தியிருந்தார் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பணம் பரிமாறப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை தருமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளை பொலிஸார் கோரியுள்ளனர். அத்துடன் மேற்படி உரையாடல்களுக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்களின் தொடர்பான விபரங்களைத் தருமாறு தொலைபேசி சேவை நிறுவனங்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right