சிக்கன் பக்கோடா

Published By: Digital Desk 7

04 Aug, 2022 | 11:04 AM
image

தேவையான பொருட்கள் 

எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் 

முட்டை - 1 

சோள மா - 1/4 கப் 

அரிசி மா - 1/4 கப் 

கடலை மா – 1/4 கப் 

எண்ணெய் - தேவையான அளவு 

ஊற வைப்பதற்கு 

மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன் 

எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 

மசாலா - 2 டீஸ்பூன் 

இஞ்சி,வெ.பூண்டு பேஸ்ட் - 1  1/2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். 

ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் கடலை மா, சோள மா, அரிசி மா சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். 

எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சிக்கன் பக்கோடா ரெடி!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்