மாத்தறை - மாலிம்பட பகுதியில் 3 வயது குழந்தையொன்று செங்கல் குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.  

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

குழந்தை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது செங்கல் குழிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குழந்தை வீட்டில் இல்லாததால் பெற்றோர் அவரை தேடியுள்ள நிலையில், குறித்த குழந்தை செங்கல் குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குழந்தையின் சடலம், தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இதேவேளை, குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென வைத்தியர்களும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.