யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார் ! பாலித்த வெள்ளிப் பதக்கத்தை வென்றார் !

04 Aug, 2022 | 06:20 AM
image

(இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமிலிருந்து நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

இதன் மூலம் 92 வருட பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்த வரலாற்றுச் சாதனையை யுப்புன் அபேகோன் தனதாக்கிக்கொண்டார். 

அத்துடன் 24 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் ஒன்று கிடைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

சிறியானி குலவன்ச, சுகத் திலக்கரட்ன ஆகிய இருவரே இலங்கை சார்பாக மெய்வல்லுநர் போட்டிகளில் கோலாலம்பூர் 1998 பொதுநுலவாய விளையாட்டு விழாவில் கடைசியாக பதக்கங்களை வென்றவர்களாவர்.

அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் இன்று இரவு (இலங்கை நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2.00 மணி)  நடைபெற்ற இறுதிப் போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்த யுப்புன் அபேகோன் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்ற 8 மெய்வல்லுநர்களின் நேரப் பெறுதிகளின் பிரகாரம் யுப்புன் அபேகோன் 8ஆவது இடத்தில் இருந்தவாறே இறுதிப் போட்டியை எதிர்கொண்டார்.

ஆனால், ஆரம்பம் முதல் கடைசி வரை முழு வீச்சில் ஓடிய யுப்புன் அபேகோன் 3ஆம் இடத்தை உறுதி செய்தார்.

அப் போட்டியில் கென்ய வீரர் பேர்டினண்ட் ஒமன்யாலா (10.02 செக்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

தென் ஆபிரிக்க வீரர் அக்கானி சிம்பைன் (10.13 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

பரர மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான F 42-44/61-64 பிரிவு தட்டெறிதல் போட்டியில் இலங்கையின் மாற்றுத்திறனாளி எச்.ஜீ. பாலித்த வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

தட்டெறிதல் போட்டியில் F42-44 பிரிவில் பங்குபற்றிய அவர் 44.20 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09