( எம்.எப்.எம்.பஸீர்)
மறைந்த முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூரின் புத்தளம் - நாகவில்லு பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சுமார் 160 இலட்சம் ரூபா வரை மதிப்புள்ளதாக நம்பப்படும் பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பல வர்த்தகங்களுக்கு உரிமையாளர் என கூறப்படும் முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூரின் மறைவுக்கு பின்னர், குறித்த வீட்டில் அவரது மனைவி வசித்து வந்துள்ள நிலையில், அவர் வீட்டிலில்லாத சமயம் இந்த திருட்டு முன்னெடுக்கப்ப்ட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
களவாடப்பட்டுள்ள பொருட்களில், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களை விட, 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பணமும் உள்ளடங்குவதாக தெரிவிக்கும் பொலிஸார், அந்த பணம் வைக்கப்பட்டிருந்த 25 இலட்சம் ரூபா வரை பெறுமதியான பெட்டகம் உடைக்கப்பட்டுள்ளதால் அதற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.
எவ்வாறாயினும் பொலிஸார், இத்திருட்டுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கும் நாகவில்லு பகுதியைச் சேட்ந்த 22 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 10 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
களாவடப்பட்ட பொருட்களில் சில மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிசார், சந்தேக நபர்களில் பலர் போதைப் பொருளுக்கு அடிமையானோர் என கூறினர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM