ஜனாதிபதியின் சர்வ கட்சி வேலைத்திட்டத்துக்கு இணக்கம் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன்

Published By: Vishnu

03 Aug, 2022 | 08:50 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபியின் நல்ல வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். மாறாக அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாங்கள் யாரும் கலந்தரையாடவும் இல்லை. அதுதொடர்பில் அழைப்பு வரவும் இல்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 03 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் கொள்கை உரையை நாங்கள் வரவேற்கின்றோம். நாட்டை கட்டியெழுப்பும் அவரது நல்ல வேலைத்திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். 

அத்துடன் அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு எமக்கு எந்த கோரிக்கையும் வரவும் இல்லை.

அதுதொடர்பாக எந்த பேச்சுவார்தையும் இடம்பெறவும் இல்லை. மாறாக சர்வ கட்சி வேலைத்திட்டத்துக்கு வருமாறு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு இனக்கம் தெரிவித்து பதில் கடிதம் அனுப்பி இருக்கின்றோம்.

அத்துடன் சர்வ கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாட வருமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.  நாளை வெள்ளிக்கிழமை நாங்கள் இதுதொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவோம். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை...

2023-09-30 08:38:16
news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29