இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் போராட்டங்களின் போது முன்னணி செயற்பாட்டாளராக விளங்கிய அவரை, உதவி பொலிஸ் அத்தியட்சர் தில்ருக் தலைமையில் இன்று (3) மாலை கோட்டையில் உள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்துக்கு திடீரென நுழைந்த சுமார் 50 வரையிலான பொலிஸார் ( நான்கு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் ) கைது செய்து அழைத்து சென்றனர்.
இதன்போது கைதுக்கான காரணம் தொடர்பில், அங்குவந்த பொலிஸ் குழுவினரிடம், ஜோஸப் ஸ்டாலினும் ஊடகவியலாளர்கள் சிலரும் வினவிய போது, ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைது செய்வதாக அவர்கள் அறிவித்தனர். எனினும் ஆர்ப்பாட்டம் செய்வது குற்றமல்ல என இதன்போது ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்ததுடன், உண்மையான காரணத்தை கூறுமாறு கோரிய போதும் பொலிஸார் எதனையும் தெரிவிக்காமல் அவரை அழைத்து சென்றனர்.
இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவவிடம் வினவிய போது, கடந்த மே 28 ஆம் திகதி, நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் ஒன்றை மையப்படுத்தி ஜோஸப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
ஜோஸப் ஸ்டாலின் கைது செய்யப்படும் போது அதனை வீடியோ எடுத்த ஊடகவியலாளர்கள் சிலருக்கும் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இந் நிலையில், அவ்வாறு கைது செய்து அழைத்து செல்லப்பட்ட ஜோஸப் ஸ்டாலின் இன்று ( 3) இரவு கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். நாளை அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM