அனைத்து கட்சி அரசாங்கத்தை புதிய தேர்தலுமே இலங்கைக்கு முக்கிய தேவைகள் - நிபுணர்கள்

By Rajeeban

03 Aug, 2022 | 05:07 PM
image

www.aa.com

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பதும்  ஜனநாயகத்தை மீள ஏற்படுத்துவதுமே இந்த தருணத்தின் தேவையாக உள்ளது என அரசியல் விமர்சகர்களும் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

தனது மோசமான நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கடந்த மாதம் ரணில்விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.

சுற்றுலாத்துறையை நம்பியிருந்த பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னர் அந்நியசெலாவணி நெருக்கடியில் சிக்குண்டுள்ள 22மில்லியன் மக்களை கொண்ட நாடு தனது அனைத்து வெளிநாட்டு கடன்களையும் செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

உணவு எரிபொருள் ஏனைய அத்தியாவசிய பொருட்களிற்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் இலங்கை காணப்படுகின்றது-எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் நீண்டநேர மின்துண்டிப்பு காணப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் வீதியில் இறங்கி அரசகட்டிடங்களை ஆக்கிரமித்ததை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச மாலைதீவிற்கு சென்று பின்னர் சிங்கப்பூர் சென்றார்.அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச மே மாதத்தில் ஆர்ப்பாட்டங்களின் பின்னர்  பதவி விலகினார்.

ஆர்ப்பாட்டங்கள் 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இலங்கை அது எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டு;ம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய அரசமைப்பு நியாயமா தேர்தல் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

எதிர்நோக்கப்படும் சவால்கள்

ஜனாதிபதிக்கு இரண்டு முன்னுரிமைகளும் சவால்களும் உள்ளன என இலங்கையின் நன்கு அறியப்பட்ட  அரசியல் விமர்சகர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்தார்.

முதலாவது ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அளவுக்கதிகமான பிரசன்னம் இல்லாமல் அனைத்துக்கட்சி அரசாங்கத்தை உருவாக்குவது என தெரிவித்துள்ள அவர் அவ்வாறான அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் தான் ராஜபக்சாக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்றார் பாதுகாக்கின்றார் என்ற எதிர்கட்சிகளின் நம்பிக்கையின்மையை போக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி எடுக்கவேண்டிய இரண்டாவது நடவடிக்கை மத்தியதர வர்க்கத்தினர் வறிய மக்கள் மீது சுமையை சுமத்தாத கொள்கை கட்டமைப்பினை சர்வதேச நாணயநிதியத்திடமும் ஏனைய கடன் வழங்குநர்களிடமும் வழங்குவதற்காக உருவாக்குவது என பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் பொருளாதார சமூக என்ற மூன்று நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள ஜயதேவ உயாங்கொட புதிய ஜனாதிபதியும் புதிய பிரதமரும் அதிகளவு நம்பகதன்மை மிக்கவர்கள் என மக்கள் நம்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் என்ன செய்யவேண்டும் என்றால் ஜனநாயக அரசாங்கத்திற்கான அடித்தளத்தை இடவேண்டும் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக மக்களிற்கு ஏற்ற கட்டமைப்பிற்குள் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான புதிய அணுகுமுறையை உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை மீள ஏற்படுத்தவேண்டும்,பொருளாதார ஆட்சிக்கான வெளிப்படையான பொறுப்புக்கூறும் அமைப்பை ஏற்படுத்தவேண்டும்,வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு சமூக ஆதரவு திட்டத்தை உருவாக்கவேண்டும்,அரசாங்கம் மற்றும் அரசியல் வர்க்கம் குறித்து இழக்கப்பட்ட நம்பிக்கையை நியாயபூர்வதன்மையை மீண்டும் ஏற்படுத்தவேண்டும் எனவும் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் பொதுமக்களும் எவ்வாறு செயற்படவேண்டும் என சர்வதேச பிராந்திய சக்திகள் தீர்மானிக்காத தீர்க்கமுடியாத எனத்தோற்றமளிக்கும் நெருக்கடிகளின் 

பேராதனை பல்கலைகழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த ரமேஸ் ராமசுவாமி புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர் என குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை ஜனாதிபதி தனது பதவியின் எதிர்காலத்திற்காக முழுமையாக ராஜபக்ச கட்சியை நம்பியிருக்கின்றார் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதன் காரணமாக தான் சுதந்திரமானவர் என்பதை மக்களிற்கு காண்பிக்கவேண்டிய கடப்பாடு அவருக்குள்ளது அவர் அதனை தனது செயற்பாடுகளின் மூலம் நிருபித்து மக்களின் ஆதரவை  பெறவேண்டும்,அவர் அப்படி செயற்பட்டால் பொருளாதாரத்திற்னு புத்துயிர் கொடுப்பதற்கும் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கும் மக்கள் அவருக்கு வாய்ப்பளிப்பார்கள் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

விக்கிரமசிங்க கடந்த மாதம் தான் மக்களின் நண்பன் ராஜபக்ச வம்சாவளியின் நண்பன் இல்லை என தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் தவறுகளில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாததும் பதவியேற்றதும் அமைதி வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காக இராணுவத்தை பயன்படுத்தியதும் ஒன்று என தெரிவிக்கின்றார் பேராதனை பல்கலைகழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த ரமேஸ் ராமசுவாமி.

தேர்தலே ஒரே வழி அது அரசியல் கட்சிக்கு நாட்டை ஆள்வதற்கான புதிய ஆணையை வழங்கும் என தெரிவிக்கும் அவர் இதுவே ஆர்ப்பாட்டக்காரர்களினதும்  எதிர்கட்சிகளினதும் வேண்டுகோள் புதிய தேர்தல் மூலம் மாத்திரமே தற்போதைய குழப்பநிலைக்கு தீர்வை காணமுடியும் மக்கள் அரசாங்கத்தை நம்புவார்கள் என்கின்றார்.

ஜனாதிபதிக்கு போதிய மக்கள் ஆதரவு இல்லை என்பதை கொழும்பை தளமாக கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆராய்ச்சியாளர் தயாகி ருவன்பத்திரன ஏற்றுக்கொள்கின்றார்.

ஜனாதிபதிக்கு எதிர்கட்சிகளின் ஆதரவும் இல்லை போல தோன்றுகின்றது அனைத்து கட்சி அரசாங்கம் இல்லாமல் மக்களின் ஆதரவை பெறாத சிக்கன நடவடிக்கைகளை அவர் எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் சர்வதேச நாணயநிதியம் கோரும் அரசியல்ஸ்திரதன்மையை அவர் எவ்வாறு வழங்குவார் என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

புதிய ஜனாதிபதியை ராஜபக்சாக்களின் கைம்பொம்மையாக பலர் பார்க்கின்றனர் என அவர் குறிப்பிடுகின்றார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆணையை வெளிப்படுத்தவில்லை ஆகவே தேர்தல்கள் அவசியமானவை என தெரிவிக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆராய்ச்சியாளர் தயாகி ருவன்பத்திரன அடுத்த மூன்று நான்கு மாதங்களில் நாடாளுமன்றம் தேர்தலிற்கு செல்லவேண்டும்,கடன் மறுசீரமைப்பு திட்டங்களை துரிதப்படுத்தவேண்டும்,எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right