மேல்­மா­கா­ணத்தில் டெங்கு நுளம்பு பெரு­கக்­கூ­டிய வகையில் சுற்­றுச்­சூ­ழலை வைத்­தி­ருந்­த­மைக்­காக 3084 பேருக்கு எதி­ராக எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

521 பிர­தே­சங்கள் தீவிர டெங்கு நோய் பரவும் வல­யங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

கடந்த இரு வாரங்­க­ளாக மேல்­மா­காணம் உள்­ளிட்ட நாட்டின் பல பாகங்­க­ளிலும் சீரற்ற கால­நிலை நில­வி­யது. இதன்­கா­ர­ண­மாக டெங்கு நோய் பர­வு­வ­தற்­கான அபாயம் தோன்­றி­யுள்­ளது. இதற்­க­மைய கொழும்பு மாந­க­ரத்தை அண்­டிய பிர­தே­சங்­களில் அதி­க­ளவு டெங்கு நுளம்பு பெரு­கி­யுள்­ள­தாக தெரி­விக்­க­ப்படு­கி­றது.

இத­ன­டிப்­ப­டையில் கொழும்பு, களுத்­துறை மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் 425 சுகா­தார பரி­சோ­த­கர்கள் கடந்த மூன்று நாட்­க­ளாக தீவி­ர­மான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

மேற்­கு­றித்த பரி­சோ­த­னையின் விளை­வாக மேல்­மா­கா­ணத்தில் டெங்கு நுளம்பு பெரு­கக்­கூ­டிய வகையில் சுற்­றுச்­சூ­ழலை வைத்­தி­ருந்த 3084 பேருக்கு எதி­ராக எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தோடு, 521 பிர­தே­சங்கள் தீவிர டெங்கு நோய் பரவும் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதற்

கமைய சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக் குமாறு சுகாதார அமைச்சு வேண்டியுள்ளது.