டீசல் , பெற்றோல் கப்பல்களுக்கு முற்பணம் செலுத்தப்பட்டது : விமான எரிபொருளுக்கு ஒப்பந்தமும் கைச்சாத்து - காஞ்சன

Published By: Vishnu

03 Aug, 2022 | 02:59 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலொன்றுக்கான கொடுப்பனவும் ,  அது தவிர மேலும் இரு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களுக்கான முற்கொடுப்பனவும் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

'நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலொன்றுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பலிலுள்ள டீசல் தொகையை தரையிறக்கும் நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு மேலும் இரு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களுக்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விமானங்களுக்கான எரிபொருள் இறக்குமதிக்காக ஓராண்டு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதற்கமைய குறித்த ஒப்பந்தத்தின் கீழான முதற்கட்ட விமான எரிபொருள் எதிர்வரும் 12 - 14 ஆம் திகதிக்கு இடையில் நாட்டை வந்தடையும்.' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை கியூ.ஆர். முறைமை தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்ச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ,

'தேசிய எரிபொருள் அனுமதி அட்டை கியு.ஆர். முறைமையுடன் அரசாங்க வாகனங்களை பதிவு செய்வதற்காக , பொதுவான பதிவு முறைமையைப் பயன்படுத்தி அவ் வாகன சாரதியின் அல்லது வாகனத்தைப் பயன்படுத்தும் நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் , கடவுச்சீட்டு இலக்கம் அல்லது வியாபார பதிவிலக்கத்துடன் ஒரு வாகனத்திற்கு ஒரு கையடக்க தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும்.

எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து சகல நிறுவனங்களுக்கும் தமது வியாபார பதிவு இலக்கம் அல்லது வழங்கப்படும் விசேட அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு விசேட தொலைபேசி இலக்கத்துடன் அவ் அரசாங்க நிறுவனத்திற்கு அல்லது வர்த்தக ஸ்தாபனத்திற்கு சொந்தமான சகல வாகனங்களையும் பதிவு செய்வதற்கான அனுமதி உரித்தாகும்.

அதன் பின்னர் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக கியூஆர். பதிவினை நீக்க முடியும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49