(எம்.மனோசித்ரா)
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 15 - 30 ஆம் திகதிக்கு இடையில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும், எனவே இம்மாத இறுதிக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தார உயர்தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 5 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் கொவிட் தொற்று மற்றும் நாட்டில் காணப்படும் ஏனைய நெருக்கடிகளால் கடந்த பெப்ரவரி மாதத்திலேயே நடத்தப்பட்டன.
இம்முறை பாடசாலை ஊடாக 2 இலட்சத்து 79 ஆயிரத்து 142 பரீட்சாதிகளும் , 66 101 தனியார் பரீட்சாத்திகளும் , ஒட்டுமொத்தமாக 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றினர்.
பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் , நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களினால் அவற்றை நிறைவு செய்வதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
எவ்வாறிருப்பினும் தற்போது வினாத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் , எனவே மேலும் தாமதிக்காது இம்மாத இறுதிக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM