அறிமுக நடிகர்களின் 'நாட் ரீச்சபிள்' திரைப்பட இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

By Digital Desk 5

03 Aug, 2022 | 02:55 PM
image

தமிழ் திரையுலகின் பாதையை திசை மாற்றி பயணிக்க வைப்பதில் புதுமுக படைப்பாளிகளின் பங்களிப்பு அதிகம். அந்த வகையில் புதுமுக அறிமுக நடிகர் விஷ்வா நடிப்பில் தயாராகி இருக்கும் 'நாட் ரீச்சபிள்' எனும் தமிழ் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதனை மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'நாட் ரீச்சபிள்'. இதில் புதுமுக நடிகர் விஷ்வா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாய் தன்யா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுபா தேவராஜ், விஜயன், காதல் சரவணன், பிர்லா போஸ், ஷர்மிளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சரண்குமார் இசையமைத்திருக்கிறார். 

கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை க்ராக் ப்ரெய்ன்  புரொடக்ஷன்ஸ் மற்றும் எம் கிரியேஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தற்போதைய சூழலில் அனைவரும் தங்களுடைய ஆறாவது விரலாக போனை எப்போதும் உடன் வைத்திருப்பதாலும், அவர்களுக்கு 'நாட் ரீச்சபிள்' என்ற வார்த்தை பரிச்சயம் என்பதாலும் இந்த தலைப்பை சூட்டி இருக்கிறோம்.

கிரைம் திரில்லர் ஜேனரில் உருவாகி இருக்கும் இந்த கதை, ரசிகர்களை சோர்வடையச் செய்யாமல் உற்சாகமாக திரைக்கதையில் பயணிக்க வைக்கும். மனித உயிருக்கு மதிப்பளிக்காத தொடர் கொலைகளை செய்யும் மன நோயாளிகளை பற்றிய கதை ( Psychopathic Serial Killer) என்பதால் ரசிகர்களை வெகுவாக கவரும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் காட்சிகள் திகிலோடும், எதிர்பார்ப்புடனும் இருப்பதால், 'நாட் ரீச்சபிள்' ரசிகர்களை ரீச் செய்து, படத்தை வெற்றி பெற வைக்கும் என திரையுலகினர் கருதுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right