முன்பு போல இல்லை

By Devika

03 Aug, 2022 | 12:24 PM
image

கேள்வி

எனக்கு வயது 22. என்னைப் பலரும் காதலிப்பதாகச் சொன்னாலும், என் குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு அவற்றை நான் மறுத்து வந்தேன். இப்போது என் குடும்பச் சூழ்நிலை பரவாயில்லை.

இந்நிலையில், ஃபேஸ்புக் மூலம், சித்த வைத்தியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. எங்கள் வீட்டிலும் இந்த உறவு பற்றித் தெரியும். பிரச்சினை என்னவென்றால், அவர் இப்போது முன்பு போல் என்னிடம் பேசுவதில்லை. கேட்டால், வேலையாக இருக்கிறேன் என்று சொல்கிறார். அவ்வப்போது மிகுந்த அன்பாகப் பேசினாலும், சில வேளைகளில் நான் அழுதாலும் என்னைக் கண்டுகொள்வதில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.

பதில்
ஒரு பெண்ணின் காதலைப் பெற்றுக்கொள்ள ஏங்கும்போது ஆண்களின் நடவடிக்கைகள் ஒரு மாதிரியாக இருப்பதும், அதே காதல் கைகூடி வந்த பின் அவர்களது நடவடிக்கை வேறு மாதிரியாகவும் இருப்பது வாடிக்கையானதே. இதில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.
ஒரு சாரார், நினைத்த பெண் கிடைத்துவிட்டபடியால், அவளும் தன்னுடையவள் என்ற எண்ணத்தில், எப­;போது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என்று எண்ணி, தன்னுடைய மற்றைய வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வேலைகள் முடிந்த பின், அதுவரை தேக்கி வைத்திருந்த ஆசைகளை­யெல்லாம் கொட்டித் தீர்ப்பார்கள்.
இன்னொரு சாரார், விரும்பிய பெண்ணின் காதல் கிடைத்தபின், அதில் இருந்த சுவாரசியம் குறைந்து­விடு­வதால், வேறு பெண்களை நோக்கித் தம் கவனத்தைத் திசை திருப்புகின்றனர். இவர்கள் எப்போதும் ஒருவரை இன்­னொரு­வருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால், இறுதிவரையிலும் இவர்களது தேடல்கள் நீண்டுகொண்டே செல்லும்.
உங்­கள் பிரச்சினையைப் பொறுத்தளவில், உங்கள் காதல் விவகாரம் உங்கள் வீட்டினருக்குத் தெரியும் என்று சொல்கிறீர்கள். உங்கள் காதலர் கௌர­வமான ஒரு தொழில் செய்து கொண்டி­ருக்கிறார். உங்களுக்கும் வயது 22 ஆகிவிட்டது. எனவே, வீட்டாரிடம் சொல்லி உங்கள் காதல் உறவை கல்யாணமாக மாற்றிக்கொள்ள வேண்டி­யது­தானே? அதன்பின், எப்போதும் நீங்கள் அவருட­னேயே இருக்கலாம். விரும்பி­னால் அவரது மருத்து­வ­மனையில் நீங்களும் ஏதே­னும் ஒரு வேலையை எடுத்துச் செய்யலாம். இதனால் உங்கள் அடிமனதில் அவர்பால் உள்ள சந்தேகம் அகன்றுவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right