லோஷனில் இருப்பதென்ன ?

By Devika

03 Aug, 2022 | 12:09 PM
image

நீர்மம்: இதுதான் லோஷனின் அடிப்படை அம்சமாக இருக்கும். சருமம் நீர்மத்தை எளிதாக உறிஞ்சிக் கொள்வதற்கும் பரவுவதற்கும் இது உதவு­கிறது.

எண்ணெய்: லோஷனில் உள்ள முதன்மையான ‘ஈரப்பத’ பொருள் இது. சருமத்தின் மேல் மெல்லிய லேயராக படர்ந்து இது மூடுவதால், சருமம் ஈரப்பதத்தை இழக்காமல் காக்கிறது.

பிணைப்புப் பொருள்: இயல்பாக பிரிந்து­ விடும் நீரையும் எண்ணெயையும் பிரியாமல் இது பிணைத்து வைக்கிறது.

தேவைக்கேற்ற உட்­பொருள்­கள் / வேதிப் பொருள்­கள்: ரெட்டினால், அண்டி ஒக்சி டெண்ட்கள், செல்லு­லைட் பஸ்டர்கள் போன்றவை இதில் அடங்கும்.

மற்ற உட்பொருள்களின் வகைகள்: 

வாசனைப் பொருள்கள், கிளிசரால், பெட்ரோலியம் ஜெல்லி, டை, புரதம் மற்ற நிலைப்படுத்­தும் பொருள்கள் போன்றவை. இவை சாதாரணமாக எல்லா மொய்ஸ்சுரைசிங் லோஷன்களிலும் சேர்க்கப்படுகின்றன.

ஏன் தேவை? 

வறண்ட சருமத்தில் ஏற்படும் சிறிய பெட்ச்களுக்கு க்ரீம்கள் ஏற்றவைதான். அதேநேரத்தில் முழுமையான கவனிப்பு, பராமரிப்புக்கு மொய்ஸ்சுரைசரும் தேவை. எல்லா லோஷன்களும் நீரில் எண்ணெய் சேர்ந்த எமல்ஷன்கள்தான். இவை சிடெயில் அல்கஹோல் போன்ற பிணைக்கும் பொருள்களைப் பயன்படுத்துகின்றன. குளித்து முடித்த உடனே லோஷன்களை பூசினால் இழந்த ஈரப்பதத்தை சருமம் மீட்டெடுத்துக் கொள்ளும். இதனால் சருமத்தில் உள்ள துளைகள் மூடப்படாமல் இருக்கும்போதே ஈரப்பதம் நன்றாக உள்ளிழுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right