இலங்கையின் கடனை பயன்படுத்தி சீனா தனது இராணுவ வலிமையை வெளிப்படுத்த முயல்கின்றது

By Rajeeban

03 Aug, 2022 | 11:46 AM
image

voanews

-

அம்பாந்தோட்டை துறைமுகத்தை இரட்டை பயன்பாட்டிற்கு உட்படுத்துவதே சீனாவின் இலக்கு,வர்த்தக மற்றும் இராணுவ நோக்கத்திற்கு துறைமுகத்தை அந்த நாடு பயன்படுத்த முயல்கின்றது என தெரிவித்தார் முன்னாள் இராஜதந்திரி தயான் ஜெயதிலக.

குறிப்பிட்ட துறைமுகத்தில் இராணுவநோக்கத்துடன் கப்பல்களை நகர்த்துவதற்கான திறனை சீனா உருவாக்க முயல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

-

இலங்கையின் மாற்றமடைந்துவரும் சூழ்நிலையின் மத்தியில்சீனா அந்த நாட்டிற்கு போர்க்கப்பலொன்றை அனுப்பியுள்ளது, இந்த நடவடிக்கை இலங்கையின் இந்து சமுத்திர கரையில் சீனா தளமொன்றை அமைக்கமுயல்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சீன மக்கள் விடுதலை இராணுவம் யுவாங் வாங் ஐந்து கப்பலை ஆராய்ச்சி கப்பல் என தெரிவிக்கின்றது, ஆனால் ஆய்வாளர்கள் அம்பாந்தோட்டைக்கு 11 ம் திகதி செய்மதி மற்றும் விண்வெளியை கண்காணிப்பதற்கான நவீன இலத்திரனியல் உபகரணங்களுடன் செல்லவுள்ள கப்பலிற்கு வேறு நோக்கம் உள்ளதா என கேள்வி எழுப்புகின்றனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை இரட்டை பயன்பாட்டிற்கு உட்படுத்துவதே சீனாவின் இலக்கு,வர்த்தக மற்றும் இராணுவ நோக்கத்திற்கு துறைமுகத்தை அந்த நாடு பயன்படுத்த முயல்கின்றது என தெரிவித்தார் முன்னாள் இராஜதந்திரி தயான் ஜெயதிலக.

குறிப்பிட்ட துறைமுகத்தில் இராணுவநோக்கத்துடன் கப்பல்களை நகர்த்துவதற்கான திறனை சீனா உருவாக்க முயல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

2017 இல் இலங்கை அரசாங்கம் இந்த துறைமுகத்தை  சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியதால்  இந்த துறைமுகம் குறித்து சீனாவிற்கு அதிகாரம் உள்ளது.

குறிப்பிட்ட துறைமுகத்தை கட்டுவதற்காக பெற்ற நிதியை திருப்பிகொடுக்க முடியாததால் துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கவேண்டிய நிலைக்கு இலங்கைதள்ளப்பட்டது.

இலங்கை துறைமுகத்தில் சீன கப்பலை  நிறுத்துவதற்காக பதவி விலக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அனுமதி வழங்கினார்.

பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் அவரை மாற்றிய புதிய அரசாங்கம் அந்த முடிவை மாற்றி கப்பல் துறைமுகத்திற்கு வருவதை தடுத்து நிறுத்தப்போவதில்லை.

இலங்கைக்கு நிதியுதவி அவசியம் கப்பலிற்கு அனுமதி மறுப்பதன் மூலம் சீனாவை அதிருப்திக்குள்ளாக்க இலங்கை விரும்பாது என்கின்றார் தேசிய சமாதான பேரவையின் இயக்குநர் ஜெகான் பெரேரா.

இலங்கை துறைமுகத்திற்கு சீன கப்பல்கள் இலகுவாக செல்லும் நிலையை உருவாக்குவதே சீனாவின் நோக்கம் - இந்த நோக்கம் சாத்தியமாகும் பட்சத்தில் சீனாவிற்கு இராணுவதளத்திற்கான தேவையில்லை என்கின்றார் என இலங்கைக்கான முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன்.

கடனிலிருந்து மீள்வதற்கான கடனை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து பெறுவதற்கு இலங்கை முயல்கின்றது.

கடனை பெறுவதற்கான நாடு கடந்தகாலத்தில் பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதற்கான  கால அட்டவணையை மாற்றியமைக்கவேண்டும் என்பது சர்வதேச நாணயநிதியத்தின் முக்கியமான விதிமுறையாகும்.

எனினும் 10 மில்;லியன் டொலர் கடனை மீள் அட்டவணைப்படுத்துமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளை சீனா நிராகரித்துள்ளது.

சீனாவின் ஆதரவின்றி கொழும்பினால் சர்வதேச நாணயநிதியத்தின் கடனை பெற முடியாது - இதனால் இலங்கை மேலும் நிதிநெருக்கடிக்குள் சிக்குப்படும்.

தனது வேண்டுகோளை சீனா ஏற்றுக்கொள்ளும் என இலங்கை எதிர்பார்க்கின்றது சீனாவின் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நாணய இடமாற்றத்தில் சீனா ஈடுபடவேண்டும் எனவும் இலங்கை விரும்புகின்றது என்கின்றார் ஜெகான்பெரேரா.

இலங்கை கிட்டத்தட்ட அந்நியசெலாவணி இல்லாத நிலையை எதிர்கொள்கின்றது சர்வதேச அளவில் மிகவும் அதிகமான எரிபொருள் விலைiயையும் எதிர்கொள்கின்றது,இதன் காரணமாக பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது மில்லியன் கணக்கான மக்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் காணப்படுவதால் நாடு உணவு நெருக்கடியையும் எதிர்கொள்கின்றது.

இலங்கைக்கு நிதி வழங்கும் நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் இராணுவதளங்களை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு சீனா இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

சீனா இதனை சீனாவின் போட்டி நாடான இந்தியாவை இலக்குவைப்பதற்குபயன்படுத்தலாம்.

இந்த விடயமே இந்தியாவிற்கு கரிசனையை ஏற்படுத்துகின்றது என தெரிவிக்கும் பேபியன் சீனா இந்தியாவிற்கு இராணுவசவால்களை உருவாக்க முயல்கின்றது இது அவ்வாறான முயற்சிகளில் ஒன்று என குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் தளத்தினை ஏற்படுத்தும் சீனாவின் முயற்சி இந்தியாவிற்கு மாத்திரமல்ல ஏனைய உலக நாடுகளிற்கும்  கரிசனையை ஏற்படுத்தலாம்,இந்து சமுத்திர கடல் ஆசியா ஐரோப்பாவை இணைப்பதே இதற்கு காரணம்.

கடன்பொறி

அதிகளவு வெளிநாட்டு நிதியை பெற்றமையே இலங்கையின் தற்போதைய நிலைக்கு காரணம்;,இதன் காரணமா அந்த நாடு பெருமளவு கடனை எதிர்கொள்கின்றது,உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இலங்கையின் கடன் வீதம் 2015 இல் 80 வீதமாக காணப்பட்டது 2021 இல் 101 வீதமாக அதிகரித்தது என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெளிநாட்டு கடன் 51 பில்லியன் டொலராக காணப்படுகின்றது.

தனது புதிய பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் சீனா பல புதிய உட்கட்டமைப்பு திட்டங்களை இலங்கையில் முன்னெடுத்தது,சீன வங்கிகளின் உதவியுடன் துறைமுகமும் விமானநிலையமும் உருவாக்கப்பட்டன.

இலங்கை தீவால் சீன கடனைதிருப்பி செலுத்த முடியவில்லை,இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சீனாஇலங்கை துறைமுகத்தை கட்டிய நிறுவனங்களிற்கு 99 வருட குத்தகை;கு வழங்கும் நிலையை ஏற்படுத்தியது.

சீனாவின் திட்டங்களும் கடன்களும் வெளிப்படையானவையில்லை,அதிக விலையானவை என அமெரிக்கா தெரிவிப்பது சரியான விடயம் என்கின்றார் ஜெகான் பெரேரா.

உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நிதி மோசடியில் ஈடுபடுவதற்கு சீனா ஊக்குவித்ததால் இலங்கையில் சீன ஊடுருவல்கள் ஒரு ஊழல் போக்கை கொண்டிருந்தன என்கின்றார்அவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right