18 வயது மாணவியை சுட்டுக்கொன்ற பல்கலைக்கழக பேராசிரியர் கைது

By Digital Desk 5

03 Aug, 2022 | 12:48 PM
image

அமெரிக்கப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், அப்பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்த 18 வயது மாணவி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.

வெஸ்ட் ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்ட் சிக்மன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அனா ஜோன்ஸ் எனும் 18 வயது மாணவியை சுட்டுக் கொன்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளர்.   கடந்த சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இம்மாணவியுடன் பேராசிரியருக்கு மோதல் எதுவும் இருந்ததாக தெரியவில்லை. வேறொரு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, கார் ஒன்றை நோக்கி பேராசிரியர் சிக்மன் துப்பாக்கி சூடு நடத்தினார். அக்காருக்குள்ளிருந்த மாணவி அனா ஜோன்ஸ் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

உணவு விடுதியொன்றின் வளாகத்தில் வைத்து, தன்னை சுடப்போவதாக பேராசிரியர் சிக்மன் அச்சுறுத்தினார் என அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு நபர் ஒருவர் தெரிவித்தார்.

அப்போது சிக்மனிடம் சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிக்மனின் கையில் ஆயுதம் இருப்பதைக் கண்டனர். அவரை அங்கிருந்து செல்லுமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உத்தரவிட்டனர்.

அதையடுத்து, அங்கிருந்து நகர்ந்து வாகனத் தரிப்பிடத்தை நோக்கி நடந்த  சிக்மன், நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதன்போது காருக்குள் இருந்த மாணவி அனா ஜோன்ஸ் படுகாயமடைந்தார். நண்பர்களால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து பேராசிரியர் ரிச்சர்ட் சிக்மன் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளதாக வெஸ்ட் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரியாவில் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த கைக்குழந்தை...

2023-02-06 22:00:36
news-image

இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்ட உறவுகளை மீட்பதற்காக...

2023-02-06 21:19:37
news-image

மீட்புபணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை துருக்கியை தாக்கிய இரண்டாவது...

2023-02-06 20:38:26
news-image

சிரியா துருக்கியில் 12 மணித்தியாலங்களின் பின்னர்...

2023-02-06 19:58:52
news-image

துருக்கி பூகம்பத்தினால் துருக்கி, சிரியாவில் 1,470...

2023-02-06 16:48:57
news-image

எனது குடும்பம் முழுவதும் இறந்துவிடும் என...

2023-02-06 16:11:35
news-image

பலஸ்தீனியர்கள் ஐவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர்

2023-02-06 15:15:12
news-image

சீனாவை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸில் அமெரிக்க பாதுகாப்புத்...

2023-02-06 14:55:49
news-image

'காஷ்மீர் ஒற்றுமை தினம்' இந்தியாவே இலக்கு

2023-02-06 15:28:47
news-image

பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர்...

2023-02-06 13:37:11
news-image

அதானி விவகாரம் | நாடு தழுவிய...

2023-02-06 12:53:10
news-image

பிரான்ஸில் வீடொன்றில் ஏற்பட்ட  தீயினால் பெண்ணொருவரும்...

2023-02-06 12:53:14