குப்பைமேனியின் மருத்துவ குணங்கள் !

By Sindu

03 Aug, 2022 | 12:22 PM
image

ற்றை தலைவலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலை சாற்றினை நல்லெண்ணெய்யுடன் கலந்து தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

குப்பைமேனி இலை  வயிற்று தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணமாக்கிடவல்லது. வயிற்று பூச்சிகளான கொக்கி புழு, நாடாப்புழு இதனை அழித்து, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமளிக்கிறது.

குப்பை மேனியின் இலைகளை அரைத்து, அதனுடன் தேன், சுண்ணாம்பு சேர்த்து பற்று போட, தொண்டைவலி, தொண்டை கட்டுதல், தொண்டை அழற்சி, வீக்கம் இவற்றிற்கெல்லாம் சிறந்த மருந்தாய் அமைகிறது.

காதுவலிக்கும், காது அடைப்புக்கும் குப்பை மேனி கீரையின் இலைகள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. காது அடைப்புக்கு குப்பைமேனி இலைகளுடன் கல் உப்பு சேர்த்து அரைத்து காதினை சுற்றி, பற்று போல போட குணமடையும்.

உடலில் ஏற்படும் பித்தத்தை குறைக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது. 

பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் நோய்கள், தீப் புண், வாத நோய்கள், வயிற்றுவலி, தாவர வகை நஞ்சுகள், மூலம், நமைச்சல், போன்றவற்றுக்கும் மருந்தாக பயன்படுகிறது. 

மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்சினைகளுக்கும் அருமருந்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right