மீண்டும் கொவிட் தொற்று தீவிரமாகப் பரவ இடமளித்துவிடாதீர்கள் -நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ரணில் கோரிக்கை

By T Yuwaraj

02 Aug, 2022 | 09:18 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையிலும் ,  4 ஆம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் காண்பிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. கொவிட் தொற்று தீவிரமாகப் பரவுவதற்கு இடமளித்து விடாமல் தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Articles Tagged Under: ரணில் விக்கிரமசிங்க | Virakesari.lk

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நாட்டில் தற்போது மீண்டும் கொவிட் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையிலும் , 4 ஆம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் காண்பிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. 17 மில்லியன் பேர் முதற்கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் , 22 623 பேர் மாத்திரமே 4 ஆம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நாட்டில் தற்போது 8 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அவற்றை எதிர்வரும் ஒக்டோபர் வரை உபயோகிக்க முடியும். அந்தக் காலப்பகுதிக்குள் இந்த தடுப்பூசிகளை முழுமையான பயன்படுத்த முடியாமல் போனால் அவற்றை வேறு நாடுகளுக்கு வழங்க வேண்டியேற்படும். எனவே விரைவாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றேன். தற்போது 'குரங்கு அம்மை' நோய் குறித்து பேசப்படுகிறது. இந்நோய் நாட்டில் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு எதிர்பாரதவிதமாக இந்நோய் இனங்காணப்பட்டால் அதற்கான சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் நாட்டினுள் மீண்டும் கொவிட் தொற்று தீவிரமாகப் பரவுவதற்கு இடமளித்து விட வேண்டாம் என்றும் , சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறும் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37
news-image

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட...

2023-02-01 16:26:18
news-image

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான தொல்லியல் திணைக்கள...

2023-02-01 15:44:52
news-image

13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும்...

2023-02-01 15:19:01
news-image

இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்ட நாடுகளின் பட்டியலில்...

2023-02-01 15:18:18
news-image

சிலாபம் பிரதேச சபையின் செயலாளர் ஸ்ரீயானியின்...

2023-02-01 15:07:23
news-image

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுக்களின் போது அமெரிக்கா...

2023-02-01 15:06:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் - ஐநா...

2023-02-01 14:52:27