(எம்.மனோசித்ரா)
பொரளை - சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் குண்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இந்த விவகாரத்துடன் மேற்குறிப்பிட்ட சந்தேகநபர்களைத் தவிர வேறு எவரும் தொடர்புபட்டுள்ளதாக தெரியவரவில்லை என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் கடந்த ஜனவரி 11 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட குண்டுகள் பாதுகாப்பு தரப்பினராலேயே அங்கு வைக்கப்பட்டது.
அதன் காரணமாகவே அந்த சம்பவம் இன்று முற்றாக மூடி மறைக்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பேராயரின் இந்த கருத்து தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே பொலிஸ் தலைமையகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நாட்டில் சட்ட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் , கடந்த ஜனவரி 11 ஆம் திகதி பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் குண்டுகள் மீட்க்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நீதி வழங்கப்படவில்லை என்றும் , அன்றைய அரசாங்கத்தில் காணப்பட்ட பிரபலமானவர்களே அந்த குண்டுகளை அங்கு வைத்ததாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளுக்கு பொறுப்பாக செயற்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளரினால் தெளிவுடுத்தப்பட்டுள்ளது.
அவரது அறிக்கைக்கு அமைய சி.சி.டி.வி. காணொளி பதிவுகளைப் பயன்படுத்தி , குறித்த தேவாலயத்திற்கு அருகில் வசித்து வந்த நபரொருவரின் வாக்குமூலத்திற்கமைய , தேவாலயத்தின் ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் சில நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, சி.சி.டி.வி. காணொளி பதிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவினால் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி 64 வயதுடைய கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு , அதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவினால் கடந்த ஜனவரி 17 ஆம் திகதி பிலியந்தல பிரதேசத்தில் 75 வயதுடைய வைத்தியரொருவர் கைது செய்யப்பட்டு , புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டு , புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு , பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இது வரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மேற்குறிப்பிடப்பட்ட சந்தேகநபர்களில் மூவரால் குண்டுகளை தேவாலயத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறுகிய காலத்திற்குள் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் பணிப்பாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வேறு நபர்கள் இந்த குண்டு வைப்பு விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக இது வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் தெரியவரவில்லை.
மேலும் இது தொடர்பில் கடந்த ஜூலை 5 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற்றதோடு , அந்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM