நிக்கவெரட்டிய பள்ளிவாசல் மீதான தாக்குதல்: காடைத்தனமான செயல் என்கிறார் நசீர்

Published By: MD.Lucias

08 Nov, 2016 | 08:51 AM
image

குருநாகல் நிக்கவெரட்டிய ஜும்ஆ பள்ளிவாயல் விஷமிகளால் பெற்றோல் குண்டுகள் மூலம் தாக்கப்பட்டமை அமைதியை சீர்குலைக்கும் மிக மோசமான காடைத்தனமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் இன்று நல்லாட்சி நிலவுகிறது. இதனை தடுக்க பலர் பலவிதமான கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடாத்துவதும் அவர்களின் இருப்பிடம் மற்றும் காணிகளைச் சூறையாடுவதும், பௌத்த மக்களே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளைக் கொண்டு வைத்து அம்மக்களைச் சீண்டுவதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்க விடயமாகும்.

எனவே இப்படியான எரிச்சலூட்டும் விஷமத்தனமான செயல்களைப் பொறுக்க முடியாத சிறுபான்மை மக்களே கடந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவைத்தமை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டிய ஒன்றாகும். ஆகவே இப்படியான கொடுமைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பள்ளிவாயல்கள், கோயில்கள் தாக்கப்படுதல் சிறுபான்மை மக்களின் காணிகள் சூறையாடப்படுதல், விஷமத்தனமான ஆர்ப்பாட்டங்களால் முஸ்லிம், தமிழ் மக்களைச் சீண்டுதல் ஆகியவற்றை முற்றாகத் தடுக்கும் நடவடிக்கையை இந்த அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இதனைத் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள அரசு தவறுமாக இருந்தால் அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பது கேள்விக்குறியாகும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இந்த நல்லாட்சியை மாசுபடுத்த வெளியாகி, நச்சுக்கருத்துக்களை அள்ளி வீசும் நாசகார சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த அரசு கைது செய்ய வேண்டும். அவர்களுக்கெதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். தவறிழைத்த பெரும் புள்ளிகளை எல்லாம் கைது செய்யும் இந்த நல்லாட்சி அரசு, விஷமத்தனமான கருத்துக்களை வீசும் பொதுபல சேனாவின் செயலாளர் மற்றும் அந்தக் குழுவினர் செய்யும் அநியாயம் மற்றும் இனவாதச் செயல்களை இன்னும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பது ஏன் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேள்வி எழுப்பினார். எனவே இன்றைய நல்லாட்சி நீடிக்க வேண்டும்.

இந்நாட்டில் வாழும் மூவினத்தையும் சேர்ந்த அனைத்து மக்களும் நிம்மதியாக வாழவேண்டும். அவர்களுக்கு மன அமைதி வேண்டும் என்ற நிலமையினை, அரசு மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்து மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என முதலமைச்சர் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22