டுபாயிலிருந்து தங்கம், தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்தி வந்த 6 பேர் கைது 

Published By: Digital Desk 4

02 Aug, 2022 | 04:06 PM
image

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்த முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக  நாட்டுக்குள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சுங்கப் பிரிவினரால் சோதனையிடப்பட்டதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அணிந்திருந்த மற்றும் அவர்களின் பயணப் பைகளில் மறைத்து வைத்திருந்த 3.158 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அதிகாரிகள் கைப்ற்றியுள்ளனர். அத்தோடு அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 ஐபோன்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

குறித்த ஆறு சந்தேக நபர்களில், 45, 48, 50 மற்றும் 51 வயதுடைய நால்வரும் அக்குறணையைச் சேர்ந்தவர்களாவர், இதேவேளை, 40 மற்றும் 41 வயதுடைய.நீர்கொழும்பு மற்றும் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த ஆறு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெலிக்கடையில் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு கைப்பற்றல்

2025-03-26 13:27:41
news-image

சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு...

2025-03-26 13:36:17
news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது...

2025-03-26 12:48:24
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:53:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-26 13:19:39
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32
news-image

இரவு நேர களியாட்ட விடுதி மோதல்...

2025-03-26 11:27:01
news-image

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்...

2025-03-26 11:41:56
news-image

வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து...

2025-03-26 11:43:27