இருட்டில் பொழுதைக் கடக்கின்றோம் ; வாய்திறக்காத மலையக அரசியல் வாதிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு

Published By: Digital Desk 5

04 Aug, 2022 | 09:37 AM
image

குமார் சுகுணா

பெற்றோல்,  டீசல்  உள்ளிட்ட எரிபொருட்களின் தட்டுபாடு  தொடர்பில்  கவனம் செலுத்தப்படுவது போல மண்ணெண்ணெய் தட்டுப்பாடு  தொடர்பில் யாரும் வாய்திறப்பதில்லை. இதனை யாரும் கண்டுக்கொள்வதில்லை. 

இதனால்  தங்களது அன்றாட  வாழ்கையை நகர்த்துவதில் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக  பாதிக்கபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் குறிப்பிட்ட சில எரிபொருள் நிலையங்கள் மட்டுமே உள்ளன. இங்கு பல மாதங்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை. தோட்ட மக்கள்  பெற்றோல் டீசலை விட மண்ணெண்ணெய்யை தான் அதிகம் பாவனைக்கு உட்படுத்துகின்றனர். 

காரணம்  போக்குவரத்து வாகனம் வைத்திருப்பவர்களை விட  அன்றாடம் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்பவர்களே இங்கு அதிகம். அதனை போலவே சமையல் எரிவாயு விலை அதிகரிப்பின் பின்னர் சாதாரண மத்திய தர மக்களும் மண்ணெண்ணெய் அடுப்பையே சமையலுக்கு பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 

முன்பு சாதாரண கடைகளில் கூட மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட மண்ணெண்nணய் வழங்கப்படுவதில்லை. பல பிரதேசங்களிலும் மண்ணெண்ணெய்க்கு மிக பெரிய தட்டுப்பாடு நிலவுவதனால் மக்கள் பெரும் துயருக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்போது  மூடப்பட்டு விட்ட நிலையில்,  தலவாக்கலை எரிபொருள் நிலையத்தை  ஒருபுரம் டயகம வரையிலான மக்களும் மறுபுரம் நானுஓயா பிரதேசம் வரையிலான மக்களும், இதனை போல வட்டக்கொட , மடக்கும்புர , உள்ளிட்ட பிரதேச மக்களு மற்றும் தலவாக்கலையை சூழ உள்ளநகர மற்றும் தோட்டப்புற மக்கள் என அனைவரும் தற்போது   தலவாக்கலையையே  நம்பியுள்ளனர் இதனை போல அட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தை எடுத்துக்கொண்டால்

அட்டனை சூழ உள்ள பிரதேச மக்கள் மட்டும் இன்றி  குயில்வத்த,  றொசல பொகவந்தலாவ உள்ளிட்ட பிரதேச மக்கள்  இதனையே நம்பியுள்ளனர். ஆனால் பல எரி பொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை. 

இதனால் தங்களது சமையலுக்கு மண்ணெண்ணெய்யை மட்டும் நம்பியுள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதனை காணக்கூடியதாக உள்ளது.

உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் ஏதாவது செய்து தங்களது தேவையை நிரப்பி கொள்கின்றனர். குறிப்பாக மண்ணெண்ணெய்க்கு பதிலாக விறகு தேடி விறகு  அடுப்பை பயன்படுத்திக்கொள்கின்றனர். 

ஆனால்  வயதானவர்களுக்கு இது சாத்தியமற்றதாக இருக்கின்றது. அது மட்டும் அல்ல றொசல, ஆக்ரோய உள்ளிட்ட பிரதேசங்களில் இரவு। நேரத்தில் மின் வெட்டு அதிகம் ஏற்படுவதனால் மண்ணெண்ணெய் இல்லாது மெழுகு வர்த்தியும் இல்லாது இரவு நேரங்களில் பெரிதும் கஸ்டப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அட்டனை அண்மித்த  றொசலை , குயில்வத்தை உள்ளிட்ட  பிரதேச மக்கள்  கருத்து தெரிவிக்கையில் ,  நாங்கள் பல மைல் தூரம் நடந்து சென்றே எரிபொருள் நிரப்பு நிலையத்தை அடைய வேண்டியுள்ளது. 

எமக்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. குறிப்பாக  குயில்வத்த பிரதேசத்தில்தான் எங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளது. நாங்கள் ஆக்ரோயா , கிளார் மெண்ட போன்ற  தோட்டங்களில் இருந்து பல மைல்கள் நடந்து வந்தே எரிபொருள் நிரப்பு நிலையத்தை அடைகின்றோம். ஆனால் எங்களுக்கு அங்கு மண்ணெண்ணை வழங்கப்படுவதிலலை. 

இதனால் வெறுங்கையோடு திரும்பி செல்கின்றோம்.நாம் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர்களாயினும் தோட்டப்பகுதியை சேர்ந்தவர்கள். நுவரெலியா நகரை அண்மித்த இடங்கள் சுற்றலா பயணிகளை அதிகம் கவர்கின்ற பிரதேசம் அது போல அட்டம் நகர பகுதிகளிலும் வர்த்க நிலையங்கள் அதிகம் உள்ளன. அதனால் அங்கு மின் சாரம் துண்டிக்கபடுவது குறைவு.

ஆனால் எமக்கு காலை மாலை என இரண்டு வேலையும் மின துண்டிக்கப்படுகின்றது. இரவு ஏழு எட்டு மணியில் இருந்து மின்சாரம துண்டிக்கப்படுகின்றது. அதன் பின்னர்  கும் இரட்டிலேயே நாளை கழிக்க வேண்டியுள்ளது.  நாட்டில் திருடர்களின் பயம் தற்போது அதிகரித்து விட்டுள்ளமையினால் இரவு நேரம் அச்சத்துடன்  நாட்களை  கழிக்க வேண்டியுள்ளது.

குறித்த பிரதேசத்திலிருந்து பாதிக்கப்பட்ட ஒருவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், எனது பெயர் வேலு நடராஜா. நான் அட்டன் றொசல கிராம சேவக பிரிவுக்கு உட்பட்ட ஆக்ரோயா தோட்டத்தை சேர்ந்தவர். 

நான் ‘ரேடியோ’ செய்திகளை கேட்கும் போது அதில் பெற்றோல் வந்துவிட்டது,  வருகிறது டீசல் வந்து விட்டது ,வருகிறது என்ற செய்திகளே கூறப்படுகின்றன. யாரும் மண்ணெண்ணையை பற்றி பேசுவதில்லை. எங்கள் ஊருக்கு இரவு பகல் என இரண்டு நேரமும் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.  இதனால்  மின் பொருட்களை பாவிக்க முடியாது உள்ளது. அதனை கூட நாங்கள் பெரிது படுத்துவதில்லை. 

ஆனால் இரவு நேரங்களில் மின் துண்டிக்கப்படுவதால் மண்ணெண்ணை விளக்குகளை பாவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அருகில் இருப்பவர் யார் என்று தெரிவதற்கும் உணவு உண்பதற்கேனும் இரவு நேரத்தில் மண்ணைண்ணை விளக்குகள் தேவை. ஆனால் மண்ணெண்ணை விளக்குகளை பாவிப்பதற்கு எம்மிடம் மண்ணெண்ணை இல்லை. 

இராதாகிருஸ்ணண் ,திகாம்பரம், உதய குமார் , ஜீவன் தொண்டமான்  உள்ளிட்ட பல அரசியல் தலைமைகள் இப்பிரதேசத்தில் உள்ளனர். 

ஆனால் யாருமே மண்ணெண்ணை பற்றி பேசுவதில்லை. குயில் வத்தையில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளது. பல மைல்கள் ஏறி அங்கு வந்து மண்ணெண்ணை  கேட்டால் அங்கு  வழங்கப்படுவதில்லை என்கிறார்கள். நாம் வாக்களித்த அரசியல் வாதிகள் யாரும் எமது இப்பிரச்சினை  பற்றி பேசுவதில்லை. 

தயவு செய்து எமக்கு ஒரு மண்ணெண்ணையை மட்டும் பெற்றுக்கொடுங்கள் போதும் வயதான நானும் என் மனைவியும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.   என்கிறார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை என்ற போதிலும்   அருகில் இருப்பவர் யார் என்று தெரிவதற்கும் உணவு உண்பதற்கேனும் இரவு நேரத்தில் மண்ணைண்ணை விளக்குகள் தேவை என இந்த மக்கள்  முன்வைக்கும் கோரிக்கை நியாயமானதே. இவர்கள் பெற்றோல் டீசல் பற்றி கேட்கவில்லை. 

அது உண்மையில் ஓரளவு வசதி படைத்தவர்களுக்கானது. ஆனால் மண்ணெண்ணை என்பது சாதாரண மக்களுக்கு மிக முக்கியமானது. அன்றாட உணவு சமைப்பதற்கும் இரவு நேரத்தல் விளக்கு எரிவதற்கும் அது தேவையானது என்பதனை உணருவோம். 

அரசியல் வாதிகள் மண்ணெண்ணை பற்றி பேச வேண்டிய தேவைகள் இல்லை. அவர்களுக்கு டீசல், பெற்றோல்  இருந்தால் போதும். எனவே யாரும் மண்ணெண்ணையை பற்றி பேசுவதில்லை. ஆனால் வாக்களித்த மக்கள் ஒரு நேர உணவை சமைப்பதற்கு கூட முடியாமல் திண்டாடுவதை அவர்கள் அறிந்துகொண்டு அதற்கான தீர்வு எதனையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும். சமூகத்தின் மூத்த குடிகள்,  உடல்நிலை சரியில்லாதவர்கள் , வசதியற்றவர்கள் படும்பாடை சற்று சிந்திக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் கலைக்கப்படுமா? அரசல் புரசலாக பேச்சு

2023-12-10 14:24:25
news-image

பாம்புகள் குடியிருக்கும் பாடசாலை கட்டடங்கள்!

2023-12-07 18:33:04
news-image

மீண்டும் பேசுபொருளாகியுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின்...

2023-12-06 18:31:23
news-image

மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள் 

2023-12-06 17:28:05
news-image

குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுடன் பதில் பொலிஸ்மா அதிபராகிய...

2023-12-04 22:03:24
news-image

சஜித்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுடன் பேசினீர்களா?...

2023-12-03 13:39:06
news-image

நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு...

2023-12-01 18:48:47
news-image

ரொஷான் ரணசிங்கவை ரணிலுக்கு எதிராக களமிறக்க...

2023-11-29 13:13:59
news-image

தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியம்?

2023-11-29 18:15:38
news-image

சீனாவால் மீண்டும் அபாயம்

2023-11-27 17:45:27
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர்...

2023-11-26 14:25:30
news-image

இன்று முதல் போர் நிறுத்தம் :...

2023-11-23 17:48:08