என்டிஆரின் மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுப்பு

Published By: Rajeeban

02 Aug, 2022 | 01:32 PM
image

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் இளைய மகள் காந்தாமனேனி உமா மகேஸ்வரி இறந்த நிலையில், அவரது ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், நடிகருமான மறைந்த என்டிஆரின் 12 பிள்ளைகளில் இளையவர்தான் உமா மகேஸ்வரி. ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவியின் தங்கை ஆவார்.

அவரது இறப்பு செய்து குறித்து அவரது சகோதரரும், நடிகருமான பாலகிருஷ்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இப்போது அமெரிக்காவில் உள்ளார். உமா மகேஸ்வரிக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக அவர் மன அழுத்ததில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்கொலைக்கு அது காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் என்.டி.ராமா ராவ். இவர் என்டிஆர் என பரவலாக அறியப்படுகிறார். சுயமரியாதை வேண்டியும், காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கும் நோக்கிலும் கடந்த 1982-இல் தெலுங்கு தேசம் கட்சி எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். ஒன்பது மாதங்களில் ஆட்சியை பிடித்தது அவரது கட்சி. அதன் பின்னர் இரு முறை ஆந்திர மாநில முதல்வராக பணியாற்றியுள்ளார். 72-வது வயதில் என்டிஆர் மரணமடைந்தார். அவரது மருமகனும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கட்சியில் எழுப்பிய கிளர்ச்சி காரணமாக பதவியை இழந்தார்.என்டிஆருக்கு மொத்தம் 8 மகன்கள் மற்றும் 4 மகள்கள். அண்மையில் உமா மகேஸ்வரியின் மகள் திருமண விழாவில் என்டிஆரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். என்டிஆரின் மகன்களில் மூவர் இதற்கு முன்னதாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக ஊடக குழு உரையாடலில் இரகசிய...

2025-03-26 14:28:31
news-image

கடவுச்சீட்டை மறந்த விமானி ; திரும்பிச்...

2025-03-26 16:10:30
news-image

கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும்...

2025-03-26 13:57:31
news-image

போரில் சிக்குண்டுள்ள உக்ரைனில் அதிர்ச்சியடைநத நிலையில்...

2025-03-26 12:21:38
news-image

பேஸ்புக்கை முடக்கியது பப்பு வா நியூ...

2025-03-26 12:37:46
news-image

தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின்...

2025-03-26 10:22:22
news-image

ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2...

2025-03-26 09:37:56
news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10
news-image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின்...

2025-03-25 14:28:26
news-image

நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்

2025-03-25 10:38:38
news-image

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து மீறும்...

2025-03-25 11:48:44