நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 5 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேரைக் காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலையை அடுத்து மஸ்கெலியா, பொல்பிட்டிய, நாவலப்பிட்டிய, ஹட்டன் ஆகிய பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களிலேயே 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
பொல்பிட்டிய
பொல்பிட்டிய, ஹிதினேகம பிரதேசத்தில் நேற்று முன்பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வயோதிப பெண்ணும் (62) 5 வயது சிறுமியும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மற்றும் உள்ளூர்வாசிகள் நடத்திய தேடுதலின் போது குறித்த இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நாவலப்பிட்டி
இதேவேளை நாவலப்பிட்டி அக்கரவத்தை பகுதியில் கடம்புலவ ஆற்றை கடக்க முயன்ற இரு ஆண்களும் பெண் ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்கள் 36, 46 மற்றும் 47 வயதுடைய கடபுல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
ஹட்டன்
இதேவேளை, மூவருடன் சென்ற நபர் ஒருவர் பன்மூர் ஏரியில் தவறி விழுந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போனவர் ஹட்டனைச் சேர்ந்த 24 வயதுடையவராவார்.
இந்நிலையில், காணாமல்போன நபருடன் வந்த ஏனைய இருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மஸ்கெலியா
இதேவேளை, மஸ்கெலியா - நோர்ட்டன் பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM