திரைப்படமாகும் தொழிலதிபரின் சுயசரிதை

By Digital Desk 5

02 Aug, 2022 | 01:13 PM
image

கன்னட நடிகர் நிஹால் ஆர், ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விஜயானந்த்’ எனும் கன்னட படத்தின் தமிழ்  பதிப்பின் டீஸர் வெளியாகியிருக்கிறது.

சாலை வழியாக சரக்குகள் மற்றும் தளபாடங்கள் போக்குவரத்து துறையில் இந்தியா முழுவதும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் வி. ஆர். எல். எனும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளரும், மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வர் அவர்களது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி, 'விஜயானந்த்' எனும் பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகியிருக்கிறது. 

இதில் கன்னடத்தின் முன்னணி நடிகரான  நிஹால் ஆர். ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கன்னட திரை உலகின் நட்சத்திர நடிகர்களான ஆனந்த் நாக், வினயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

எம். ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு கீர்த்தன் புஜாரி ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசை அமைத்திருக்கிறார். 

வெற்றி பெற்ற தொழிலதிபரின் சுயசரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட்செலவில் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் தயாரித்திருக்கிறார்.

‘குரு’, ‘சூரரைப் போற்று’ என வெற்றி பெற்ற தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி ரசிகர்களிடம் பாராட்டையும், விருதையும் பெற்றிருக்கிறது. 

அந்த வகையில் சரக்குகள் தளவாடங்கள் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து மற்றும் பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வர், அவரது வாழ்க்கை வரலாறு, 'விஜயானந்த்' எனும் பெயரில் திரைப்படமாக தயாராகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right