நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­போ­யுள்ள தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு தற்­போது சிறந்­த­தொரு பொன்­னான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. இரண்டு கட்­சி­க­ளையும் கொண்டு அமைக்­கப்­பட்­டுள்ள அர­சாங்­கத்­துடன் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­ப­டு­வ­தா­னது தீர்­வைக்­காண்­ப­தற்­கான சிறந்த வாய்ப்பை உரு­வாக்­கிக்­கொ­டுத்­துள்­ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தரும் இரா­ஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

இறுதி பஸ் தற்­போது வந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. அந்த பஸ்ஸில் ஏறி­வி­ட­வேண்டும். அந்த பஸ்ஸில் ஏறா­விட்டால் வேறு பஸ்கள் வராது. எனவே தற்­போது வர­வுள்ள பஸ்ஸை தவ­ற­வி­டாமல் அதில் ஏறிக்­கொள்­ள­வேண்­டி­யது அனை­வ­ரதும் பொறுப்­பாகும் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்­பிட்டார்.

அர­சியல் தீர்வு விடயம் மற்றும் அர­சியல் நிலைமை குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்போய் காணப்­படும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வைக்­காண்­ப­தற்கு தற்­போது சிறந்த பொன்­னான வாய்ப்பு கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தை உரிய முறையில் பயன்­ப­டுத்­திக்­கொள்­வது அவ­சி­ய­மாகும்.

குறிப்­பாக இம்­முறை வரவு செல­வுத்­திட்­டத்­தின்­போது எப்­போதும் நடை­பெ­றாத சில முக்­கிய நிகழ்­வுகள் இடம்­பெற்­றன. குறிப்­பாக எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்சி வரவு செல­வுத்­திட்­டத்­துக்கு ஆத­ரவு அளித்­தது. அது மட்­டு­மன்றி பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற எந்­த­வொரு தமிழ் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் வரவு செல­வுத்­திட்­டத்தை எதிர்க்­க­வில்லை. இது எமக்கு கிடைத்த பாரிய வெற்­றி­யாகும்.

அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வைக்­காண்­ப­தற்கு தற்­போ­தைய சூழலை போன்று வேறு சூழல் கிடைக்­காது. எனவே இந்த பொன்­னான வாய்ப்பை பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வைக்­கண்­டு­வி­ட­வேண்டும்.

குறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தற்­போது கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யுள்­ளன. எனவே இந்த தேசிய அர­சாங்க காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வையும் பெற்று இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வைக்­காண்­பதே பொருத்­த­மா­ன­தாக அமையும். நாட்டின் பிர­தான இரண்டு கட்­சி­க­ளையும் கொண்டு அமைக்­கப்­பட்­டுள்ள அர­சாங்­கத்­துடன் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­ப­டு­வ­தா­னது தீர்­வைக்­காண்­ப­தற்­கான சிறந்த வாய்ப்பை உரு­வாக்­கிக்­கொ­டுத்­துள்­ளது.

ஆனால் அந்த சந்­தர்ப்பம் உரிய முறையில் பயன்­ப­டுத்­தப்­ப­டுமா என்­பதே தற்­போது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. ஆனால் நாம் இறுதி சந்­தர்ப்­பத்தை பெற்­றுள்ளோம் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது. இறுதி பஸ் தற்­போது வந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. அந்த பஸ்ஸில் ஏறி­வி­ட­வேண்டும். அந்த பஸ்ஸில் ஏறா­விட்டால் வேறு பஸ்கள் வராது. எனவே தற்­போது வர­வுள்ள பஸ்ஸை தவ­ற­வி­டாமல் அதில் ஏறிக்­கொள்­ள­வேண்­டி­யது அனைவரதும் பொறுப்பாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பிரச்சினைக்கு தீர்வுக்காண்பதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்யும். எனவே அனைத்து தரப்பினரும் பிரச்சினைக்கு தீர்வைக்காண்பதற்கு தமது பங்களிப்பை வழங்குவார்கள் என்று நம்புகின்றோம் என்றார்.