முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடு

Published By: Digital Desk 5

01 Aug, 2022 | 06:52 PM
image

முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடு ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள பூநகரி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே குறித்த முறைகேடு இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் தீர்ந்துவிட்டதாக பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், கியூ. ஆர் பரிசோதனை இன்றி மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கொள்கலன்களிற்கும் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் வினவியபோது,

நேற்று 31  ஆம் திகதி வரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாடு முழுவதும் கியூ.ஆர். நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் எமது ஆளணியை நிறுத்திக்கொண்டோம்.

இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைக்குட்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25
news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட...

2025-03-25 18:53:59
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02