(எம்.ஆர்.எம்.வஸீம்)
கோப் அறிக்கை விசாரணை முடியும்வரை அர்ஜுன் மஹேந்திரனை பிரதமர் அலுவலகத்தில் இருந்து நீக்கவேண்டும். நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அவரை நாட்டை விட்டு வெளியேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர தெரிவித்தார்.

சோசலிஸ மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
கோப் அறிக்கையின் பரிந்துரைக்கமைய அர்ஜுன் மஹேந்திரன் பொறுப்பு கூறவேண்டும் என தெரிவித்துள்ளது. அத்துடன் அர்ஜுன் மஹேந்திரனுக்கு வழக்கு தொடரப்போவது பிரதமர். அதேபோன்று அவரை அந்த பதவிக்கு நியமித்ததும் பிரதமர். அர்ஜுன் மஹேந்திரனின் சாட்சியாக இருப்பதும் பிரதமர். இவ்வாரான நிலையில் கோப் அறிக்கையை அவசர அவசரமாக சட்டமா அதிபருக்கு அனுப்பியது தொடர்பில் சந்தேகம் எழுகின்றது.