கார் விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி ; மூவர் காயம்

Published By: Digital Desk 5

01 Aug, 2022 | 03:14 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தங்கல்ல பிரதேசத்தில் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில்  இளைஞர்கள்  இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கலையில் இருந்து திஸ்ஸமகாராம நோக்கி பயணித்து கொண்டிருந்த கார் தங்கல்ல, ஹேனக்கடுவ பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரில் 5 பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.  உயிரிழந்தவர்கள் 29 மற்றும் 35 வயதுடைய ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கார் சாரதி மற்றும் மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 09:01:40
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36