(எம்.எம்.சில்வெஸ்டர்)
தேசிய எரிபொருள் பத்திரத்தின் கியூ ஆர். முறைப்படி அல்லாமல் எரிபொருள் வழங்குபவர் மற்றும் பெறுபவர்கள் குறித்து தகவல்கள் வழங்கும்படி மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கியூ.ஆர். குறியீட்டை பயன்படுத்தாது எரிபொருட்களை பெறுபவர்கள் மற்றும் வழங்குபவர்கள் குறித்த படங்கள் மற்றும் வீடியோக்களை வட்ஸ்அப் மூலம் 0742123123 என்ற தொலைபேசி எண்ணுக்கு அனுப்பபும்படி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் சட்டவிரோதமாக எரிபொருட்களை சேகரிப்பவர்கள், அமைச்சின் அறிவுரைகளுக்கு ஏற்ப செயற்படாத ஊழியர்கள், போலியான கியூ.ஆர். குறியீடுகள், போலியாக வாகனப் பதிவு எண்களை அச்சிடும் நபர்கள் அல்லது குழுக்கள் பற்றிய படங்கள் மற்றும் வீடியோக்களை மேற்கூறிய தொலைப்பேசி எண்ணுக்கு வட்ஸ்அப் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளதுடன், குறித்த தகவல்கள் பொலிஸாரிடம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒவ்வொரு மாதத்தினதும் 01 ஆம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலைகளின் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM