மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவணி

By Vishnu

01 Aug, 2022 | 04:37 PM
image

(கனகராசா சரவணன்)

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ-முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி இன்று (01) திங்கட்கிழமை இடம்பெற்றது.

மாரசூரனை வதைத்து மாரியம்மன் எனப் பெயர் கொண்ட உலகமெல்லாம் இரட்சத்துவரும் அன்னை மாரியம்மன் அகல் விளக்கு எரியவைத்த காலத்துக்கு முந்திய காலமாக மட்டக்களப்பில் அருள்பாலித்துவருகின்றாள் அம்மாளின் ஆடிப்பூர பால்குட பவனி.

ஆலய பிரதம குரு ஸ்ரீ. நிஜோத் குருக்களின் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் ஆரம்பமாகி விசேட கும்ப பூஜைகள் நடைபெற்றதுடன் மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஆலயத்தில் இருந்து பிரதான கும்பம் மற்றும் ஆயிரத்துக்கு மேட்பட்ட அடியார்கள் மஞ்சள் நிற கலாச்சார உடை அணிந்து பால் பாற்குடப்பவனி ஆரம்பமாகி மத்திய வீதி ஊடாக திருமலை பிரதான வீதியுடக்க  பவணியாக கொத்துக்குளத்து அம்பாள் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது. 

இதன் பின்னர் போது  மூலமூர்த்தி மற்றும் பாரிபால மூர்த்திகளுக்கு விசேட அபிஷேக பூசைகளும் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் வேத,மேள வாத்தியங்கள், நாதங்கள் முழங்கள் அடியார்களின் அரோகரா கோசத்துடன் அம்மனுக்கு பால் அபிஷேகம்  நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right