கடற்­க­ரைக்குச் செல்லும் பெண்­க­ளுக்­காக ஸ்பானிய அரசின் பிரச்­சாரம்

By Vishnu

01 Aug, 2022 | 07:35 PM
image

கடற்­க­ரைக்குச் செல்­லும்­போது தமது உடல் தோற்றம் குறித்து கவ­லை­ய­டையும் பெண்­க­ளுக்­காக விசேட பிரச்­சாரத் திட்­ட­மொன்றை ஸ்பானிய அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ளது.

வட அரை­கோள நாடு­களில் தற்­போது கோடைக்­காலம் நில­வு­கின்­றது. கோடைக்­கா­லத்தில் கடற்­க­ரைக்கு செல்­ப­வர்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரிப்­பது வழக்கம்.

இந்­நி­லையில், கடற்­க­ரைக்கு ஏற்ப ஆடை­களை அணிந்து செல்­லும்­போது தமது உடல் தோற்றம் குறித்து பல பெண்கள் கவ­லை­ய­டை­யக்­கூடும் என்­ப­துதால், மேற்­படி பிரச்­சாரத் திட்­டத்தை ஸ்பானிய அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ளது.

 அனைத்துப் பெண்­களின் உடல்­களும் கடற்­க­ரைக்கு ஏற்ற உடல்­களே என்ற தொனிப்­பொ­ருளில் இப்­பி­ர­சாரம் நடத்­தப்­ப­டு­கி­றது.

இது தொடர்­பான சுவ­ரொட்­டி­க­ளையும் ஸ்பானிய அர­சாங்கம் வெளி­யிட்­டுள்­ளது. 

பரு­ம­னான உடற்­தோற்றம் கொண்ட பெண்கள், சத்­தி­ர­சி­கிச்­சையால் மார்­ப­கங்கள் அகற்­றப்­பட்ட பெண் ஆகி­யோரும் இந்த சுவ­ரொட்­டியில் இடம்­பெற்­றுள்­ளனர்.

இப்­பி­ர­சா­ரத்­துக்கு பலர் வர­வேற்பு தெரி­வித்­துள்ள அதே­வேளை, சிலர் எதிர்­ம­றை­யான விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்­துள்­ளனர். 

பல்­வேறு தோற்­றங்கள் கொண்ட ஆண்­க­ளையும் உள்­ள­டக்கும் விதத்தில் இந்த சுவ­ரொட்டி விஸ்­த­ரிக்­கப்­ப­டுமா என சிலர் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர்.

ஸ்பெய்னின் இடது சாரி தலைவர் காயோ லாரா இது தொடர்பாக கூறுகையில், இல்லாத பிரச்சினையொன்றை இப்பிரச்சாரம் உருவாக்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right