14 வயதான சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள, கோடீஸ்வரியான அவுஸ்திரேலியப் பெண்ணொருவர், தன்னை விளக்கமறியலிலிருந்து விரைவாக விடுவிக்குமாறு கோரியுள்ளார். தான் சிறையிலுள்ள காலத்தில் தனது நிறுவனம் மில்லியன் கணக்கான டொலர்களை இழந்து வருகிறது என அவர் இக்கோரிக்கைக் காரணம் கூறியுள்ளார்.
45 வயதான சவன்னாஹ் டெய்ஸ்லி எனும் பெண்ணே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர். சிட்னி நகரைச் சேர்ந்த பிரபல குதிரை வளர்ப்பாளர் ரொஸ் டெய்ஸ்லியின் மகள் இவர். ஸ்மார்ட் கிளீன்ஸ் எனும் நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். சமூகவலைத்தளங்கள் மூலமும் டெய்ஸ்லி பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் அவரை 40,000 பேர் பின் தொடர்கின்றனர்.
14 வயதான ஒரு சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக சவன்னாஹ் டெய்ஸ்லி மீது குற்றம்சுமத்தப்பட்டது. கடந்த வருடம் மே 21 ஆம் திகதி ஒரே நாளில் 4 தடவைகள் மேற்படி சிறுவனுடன் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டார் என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 27 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
சிட்னிக்கு அருகிலுள்ள அதிக பாதுகாப்பு கொண்ட சில்வர்வோட்டர் சிறையில் டெய்ஸ்லி அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்தவாரம் சிட்னியிலுள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவர் தன்னை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதிபதியிடம் சவன்னாஹ் டெய்ஸ்லி கோரினார்.
விளக்கமறியலில் இருப்பதால் தனது மனநலம் மிகவும் பாதிப்படைவதாகவும், தான் சிறையில் இருக்கும் காலத்தில் தனது நிறுவனம் மில்லியன் கணக்கான டொலர்களை இழப்பதாகவும் அவர் கூறினார்.
டெய்ஸ்லியின் சட்டத்தரணி கெப்ரியெல் பசீர், கூறுகையில், 'தனது புதிய உற்பத்திகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும், புதிய பெயருக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்கூடிய ஒரேயொரு நபராக சவன்னாஹ் டெய்ஸ்லியே உள்ளார். அவர் விடுவிக்கப்படாவிட்டால் அவரின் நிறுவனம் உடனடியாக 300,000 டொலர்களை இழக்கும்' என்றார்.
தான் பிணையில் செல்வதற்கு 100,000 டொலர்களை பிணையாக செலுத்துவதாக டெய்ஸ்லி கூறினார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு பிணையில் செல்ல அனுமதித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM