7 குழந்­தை­களை கொலை செய்­த­தாக தாதி மீது குற்­றச்­சாட்டு

Published By: Vishnu

01 Aug, 2022 | 01:07 PM
image

இங்­கி­லாந்தைச் சேர்ந்த ஒரு தாதி, 7 குழந்­தை­களை கொலை செய்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. 32 வய­தான லூசி லெட்பி எனும் இந்த யுவதி, செஸ்டர் நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பணி­யாற்­றி­யவர். 

இவர் 5 பெண் குழந்­தை­க­ளையும் 2 ஆண் குழந்­தை­க­ளையும் கொலை செய்தார் என அதி­கா­ரிகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். 

2015 மார்ச் முதல் 2016 ஜூலை வரை­யான காலத்தில் இக­்கொ­லைகள் இடம்­பெற்­ற­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். 

குறித்த காலப்­ப­கு­தியில் மேற்­படி வைத்­தி­ய­சா­லையில் ஏற்­பட்ட மர­ணங்­களின் எண்­ணிக்கை சரா­ச­ரி­யை­விட 10 சத­வீதம் அதி­க­மாக இருந்­தது. இது குறித்து பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­ட­வுடன் பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

உரிய காலத்­துக்கு முன்னர் பிறந்த பல குழந்­தைகள் இதயம் மற்றும் நுரை­யீரல் பிரச்­சி­னைகள் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளதை மருத்­து­வர்கள் கண்­டு­பி­டித்­தனர்.

மேற்­படி காலப்­ப­கு­தியில் மேற்­படி வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்ற 17 குழந்­தை­களின் மரணம் தொடர்பில் 2018 ஆண்டு  லூசி லெட்­பியின் வீட்டில் பொலிஸார் தேடுதல் நடத்­தி­யி­ருந்­தனர்.

தற்­போது 7 குழந்­தை­களின் மர­ணத்­துக்கு லூசி லெட்பி காரணம் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இக்­கொலைக் குற்றச்சாட்டுகளை லூசி லெட்பி நிராகரித்துள்ளார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்