அமெரிக்காவில் 137 கோடி (1.37பில்லியன்) டொலர் மெகா மில்லியன்ஸ் ஜக்பொட் பரிசுக்குரிய வெற்றி லொத்தர் சீட்டு விற்னையாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த லொத்தர் குலுக்கல் நடைபெற்றது. இதன் வெற்றி இலக்கங்களாக 13, 36, 45, 57, 67 ஆகியனவும் மெகா போல் இலக்கமாக 14 ஆகவும் இருந்தன.
இந்த இலக்கங்களைக் கொண்ட லொத்தர் சீட்டு இலினோய்ஸ் மாநிலத்தில் விற்பனையாகியுள்ளது என மெகா மில்லியன்ஸ் லொத்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஜெக்பொட் லொத்தர் சீட்டு விற்பனையாகுவதற்கான நிகழ்தகவு வாய்ப்பு 300 மில்லியன்களில் ஒன்று என நிபுணர்கள் கணித்திருந்தனர்
கடந்த வெள்ளிக்கிழமைக்குரிய ஜக்பொட் பரிசு முன்னர் கணிப்பிடப்பட்டதைவிட அதிகரித்திருந்தது. அதிக சீட்டுகள் விற்பனையாகியமையே இதற்கான காரணம்.
இந்த ஜெக்பொட் பரிசுப் பணத்தை இரு விதங்களில் பெற முடியும். அதாவது ஒரே தடவையில் 780.05 மில்லியன் (78 கோடி) டொலர்களைப் பெறலாம். அல்லது 137.7 கோடி டொலர்களை 29 வருடங்களில் தவணை முறையில் பெறலாம்.
இந்த பரிசு வென்றவர் அது குறித்து அறிவித்ததாக நேற்றுவரை தகவல் வெளியாகவில்லை.
டேஸ் பிளெய்ன்ஸ் நகரிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் இந்த சீட்டு விற்பனையாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலவேளை இப்பரிசை வென்றவர் யார் என்பது பகிரங்கமாக தெரியவராமலேயே போகலாம்.
ஏனெனில், இத்தகைய பெருந்தொகை பரிசை வென்றவர்கள், தமது பெயர், முகவரியை இரகசியமாக வைத்திருக்க இலினோய்ஸ் மாநில சட்டம் அனுமதிக்கிறது.
இது தொடர்பாக மெகா மில்லியன்ஸ் இலினோய்ஸ் மாநில பணிப்பாளர் ஹலோல்ட் மேய்ஸ் கூறுகையில், 'வெற்றியீட்டியவர் எம்முடன் இதுவரை தொடர்புகொள்ளவில்லை. இப்பெருந்தொகை பரிசை வென்றவர் அது குறித்து அறிந்திருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. எனவே லொத்தர் சீட்டு வாங்கியவர்கள் தமது சீட்டு இலக்கங்களை வெற்றி இலக்கங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்' எனக் கூறியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு மெகா மில்லியன்ஸ் ஜக்பொட் பரிசு ஆரம்பிக்கப்பட்டது.
தலா 2 டொலர் விலையில் மெகா மில்லியன்ஸ் லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் 45 மாநிலங்கள், தலைநகர் வொஷிங்டன் டிசியிலும் வேர்ஜின் தீவுகளிலும் மெகா மில்லியன்ஸ் லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
நெவேடா, உட்டா, அலபாமா, அலாஸ்கா, ஹவாய் மாநிலங்களில் மெகா மில்லியன்ஸ் லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை.
மெகா மில்லியன்ஸ் லொத்தர் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய பரிசுத் தொகை இதுவாகும்.
2018 ஆம் ஆண்டு வெல்லப்பட்ட 1.547 பில்லியன் தொகை இதுவரை வெல்லப்பட்ட ஆகக்கூடுதலான மெகா மில்லியன்ஸ் ஜக்பொட் பரிசாகும். தென் கரோலினா மாநிலத்தில் மேற்படி லொத்தர் பரிசுச்சீட்டு வெல்லப்பட்டிருந்தது.
இறுதியாக மெகா மில்லியன்ஸ் ஜக்பொட் பரிசு கடந்த ஏப்ரல் மாதம் வெல்லப்பட்டிருந்தது. டென்னஸி மாநிலத்தில் அந்த சீட்டு விற்பனையாகியிருந்தது. அதன்பின் ஜக்பொட் பரிசு வெல்லப்படாமல் பரிசுத் தொகை அதிகரித்துச் சென்றதால், மெகா மில்லியன்ஸ் லொத்தர் டிக்கெட்டை வாங்குவதற்கு அமெரிக்கர்கள் பெரும் ஆர்வம் காட்டி வந்தனர்.
50,000 ஊழியர்களுக்கும் லொத்தர்சீட்டு வாங்கிக் கொடுத்த நிறுவனம்
அமெரிக்கா முழுவதும் தனது கிளைகளைக் கொண்டுள்ள ரைசிங் கேன்ஸ் எனும் உணவு விடுதி நிறுவனத்தின் 50,000 ஊழியர்களுக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை குலுக்கலுக்கான தலா ஒரு மெகா மில்லியன்ஸ் லொத்தர் சீட்டை வாங்கிக்கொடுப்பதற்கு பிரதம நிறைவேற்று அதிகாரி டொட் கிரேவ்ஸும் இணை பிரதம நிறைவேற்று அதிகாரி ஏ.ஜே.குமரனும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்காக ஒரு லட்சம் டொலர்களை இந்நிறுவனம் செலவிட்டது. செவ்வாய்க்கிழமை குலுக்கலுக்கான ஜக்பொட் பரிசுத் தொகை 80 கோடி டொலர்களாக இருந்தது. அன்றைய தினம் ஜக்பொட் பரிசு கிடைத்து அதை ஒரே தடவையில் பெறுவதானால் வரிகள் போக, 48 கோடி டொலர் கிடைத்திருக்கும். அந்த பரிசுத்தொகை மேற்படி 50,000 லொத்தர் சீட்டுகளில் ஒன்றுக்கு கிடைத்தால் அப்பரிசுத் தொகை ஊழியர்களிடையே சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
செவ்வாய்க்கிழமை குலுக்களில் குறிப்பி டத்தக்க பரிசு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் கடந்த வெள்ளிக்கிழமை குலுக்கலுக்காக மேலும் அதிகமான லொத்தர் சீட்டுகளை ரைசிங் கேன்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு வாங்கிக் கொடுத்தது. இம்முறை பரிசு எதுவும் கிடைத்ததா என்பது உடனடியாக தெரியவரவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM