பொருளாதார ஸ்திரதன்மை ஏற்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்கின்றார் இலங்கை ஜனாதிபதி

Published By: Rajeeban

01 Aug, 2022 | 09:27 AM
image

By Philip Wen and Tripti Lahiri
wsj

இலங்கை தனது மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவது பொருளாதார நெருக்கடி நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு உதவியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தைய குழப்பநிலையால் முடங்கியுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுடன் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகளை ஆரம்பிக்கலாம் என அவர் குறிப்பிட்;டுள்ளார்.

நாங்கள் ஏற்கனவே மிகமோசமான நிலைக்கு சென்றுவிட்டோம் என ரணில்விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை வோல்ஸ்ரீட் ஜேர்னலுடனான பேட்டியின் போது தெரிவித்தார்.

இந்த மோசமான நிலைமை முடிவிற்கு வரும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன், எங்களால் எவ்வளவு வேகமாக அந்த நிலைக்கு செல்ல முடியும் என்பதே முக்கிய விடயம் என அவர் தெரிவித்தார்.

மிகவேகமாக அதிகரித்த பணவீக்கத்தையும் எரிபொருள் சமையல் எரிவாயுவிற்கான நீண்ட வரிசைகளையும் சந்தித்த இலங்கையர்கள் தங்கள் பொருளாதார நிலைமையில் மாற்றமடைவதை பார்ப்பதற்கு பல மாதங்களாகும் என்பதையும விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து விக்கிரமசிங்க கருத்து தெரிவித்தார், ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி அலுவலகத்திற்கு அவர் புதன்கிழமையே சென்றார். சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை இந்த மாத இறுதிக்குள் சாத்தியமாகும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார், அதன் பின்னர் நாடு இருதரப்பு கடன்வழங்குநர்கள் உட்பட பல தரப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியும்.

எந்த ஆரம்பகட்;ட உடன்படிக்கைக்கும் நிதிவழங்குவதற்கான சர்வதேச நாணயநிதியத்தின் சபையின் அனுமதி அவசியம்.இந்த நடைமுறை பல மாதங்கள் நீடிக்கலாம்.

நாங்கள் மிக முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்திவருகின்றோம்,ஸ்திரமற்ற அரசியல் நிலைமை காணப்பட்டிருக்காவிட்டால் இந்த மாதமே சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை சாத்தியமாகியிருக்கும் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான சரியான தருணமல் இதுவல்ல என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்ச பொருளாதாரத்தை கையாண்ட விதத்திற்காக அவர் பதவி விலகவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் அவரின் இலங்கை வருகை அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ராஜபக்ச 13 ம் திகதி இலங்கையிலிருந்து மாலைதீவிற்கு சென்றார் பின்னர் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கு தனது பதவியை மின்னஞ்சல் மூலம் இராஜினாமா செய்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஒளிந்திருக்கவில்லை அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது என இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன  செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார்.

நிர்வாகத்தை மீள ஒப்படைப்பது ஏனைய அரசாங்க நடவடிக்கைகள் தொடர்பில் ராஜபக்சவுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்த ரணில்விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்ச இலங்கைக்கு தான் விரைவில் வரவுள்ளதாக தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.

அவர் நாடு திரும்புவதற்கான தருணம் இதுவென நான் கருதவில்லை எனக்கு அவ்வாறான தகவல் கிடைக்கவில்லை என விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற வாக்களிப்பில் வெற்றிபெற்று- ஜுலை20 ரணில்விக்கிரமசிங்க (73)ராஜபக்சவிற்கு பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.ஆனால் இலங்கையின் பரந்துபட்ட மக்கள் மத்தியிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியிலும் இவர் ஆதரவற்றவராக காணப்படுகின்றார், முன்னயை ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமானவராக அவர்கள் இவரை கருதுகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து அதனை ஆக்கிரமித்த ராஜபக்சவை வெளியேற்றிய  அதேதினத்தன்று ஜூலை 9 ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் இல்லம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள்ளும் நுழைந்தனர்.அவரது வீட்டிற்கு தீவைத்தனர்.

தற்போது அவர்கள் அரசகட்டிடங்களை அதிகாரிகளிடம் மீள ஒப்படைத்துள்ளனர்.

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட விதத்தினை விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை நியாயப்படுத்தினார்.

வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவே நான் வந்தேன்,-ஜனாதிபதி பதவி விலகியதால் -நாடு தீயில்சிக்குண்டிருந்தது அவர்கள் அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றிக்கொண்டிருந்தார்கள் என தெரிவித்த ரணில்விக்கிரமசிங்க நான் அரசமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04