இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சீன தூதுவர் உறுதி

Published By: Digital Desk 4

31 Jul, 2022 | 09:53 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்தின் பங்குதாரர்கள் என்ற ரீதியில் , அதன் பணிப்பாளர் சபை கலந்துரையாடல்களின் போது தாம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஆரம்பித்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

Articles Tagged Under: சீன தூதுவர் கியீ ஷென் வொங் | Virakesari.lk

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கியு ஷென் ஹொங் ஆகியோருக்கடையில் கடந்த வெள்ளியன்று கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சீன பிரதமரினால் புதிய பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்து செய்தி இதன் போது தூதுவரால் , பிரதமரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.  

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் காணப்படும் பொருளாதார, விவசாய மற்றும் கலாசார தொடர்புகள் என்பவற்றை, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு , சீனா வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன , அதற்கு நீண்ட கால தீர்வாக விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்ப்பாசனத் தொழில் மற்றும் நீர் வழங்கல் துறைகளில் நேரடி தனியார் முதலீடுகள் எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு தற்போது மந்தநிலையில் உள்ள சீன சுற்றுலாப் பயணிகளின் இலங்கை வருகையை மீண்டும் மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன் போது வலியுறுத்தினார். தென் மாகாணத்தை மையமாகக் கொண்ட அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்திற்கு அருகில் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் என்பவற்றில் சீனாவின் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஆரம்பித்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதோடு , சீனா சர்வதேச நாணய நிதியத்தின்  பங்குதாரர்கள்   என்ற ரீதியில் பணிப்பாளர் சபை கலந்துரையாடல்களின் போது அதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றும் சீன தூதுவர் பிரதமரிடம் உறுதியளித்தார்.

சீன கம்யுனிஸ கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு பிரதமர் இதன் போது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06